பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அல்லவா? நாம் ஒன்றனுள் நுழையும்போது, நாம் நுழைகிறோம் என்ற தற்போதம் மேலோங்கியிருப்பதால், நுழைந்து விட்டோம் என்ற எண்ணம் உறுதிப்பட்டவுடன் ஒரு மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், இது முடியாதபொழுது, அவன் நம்முள் நுழைகிறான் என்றால் அதை எப்படிக் கண்டுகொள்வது? ஒளி, ஒலி, மணம் என்பவை முறையே கண், காது, மூக்கு என்ற பொறிகளின்வழி உள்ளே நுழைகின்றன. அவை நுழைவதை, நுழைகின்ற அதே நேரத்திலேயே நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், அணுவுக்கணுவாய் இருக்கும் அவன் மிக நுண்ணியனாயிற்றே! பொறி புலன்கள் மூலம் அவன் நுழையமாட்டானே: மனத்தால் நினைக்கவோ, சித்தத்தால் சிந்திக்கவோ, புத்தியால் அளவிடப்படவோ, அகங்காரத்தால் அறியப்படவோ முடியாதவனாயிற்றே! அப்படிப்பட்ட நுண்ணியன் தானாகவே விரும்பி வந்து நம்முள் நுழைந்தான் என்பதை எப்படி உணர்ந்து கொள்வது? அதற்கு விடை கூறுகிறார் அடிகளார் நுண்ணியனாய் வந்து அடியேன்பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் அறியலாம் என்கிறார். பரிந்துருக்கும் பாவகம் நம்முடைய முயற்சியால் நடை பெறுவது ஒன்றன்று. எனவே, உள்ளம் உருகிற்று என்றால், அது தானாக உருகவில்லை; யாரோ ஒருவன் உருக்கினான் என்பது தெளியப்படும். அப்படி உருக்கினவன் நம்மாட்டுக் கொண்ட அளவற்ற கருணையால்தான் உருக்கினான் என்பதைப் பரிந்துருக்கும் பாவகம் என்கிறார் அடிகளார். பாவகம் என்பது நின்னவு என்ற பொருளைத் தரும். இந்த நினைவு வந்தவுடன் கண்ணில் நீர் மல்குகின்றது. மாலும், நூலும் நுழைவரிய அந்த நுண்பொருள், தானே வந்து உள் புகுந்து, பரிவோடு நம்முள்ளத்தை உருக்கிற்று என்ற நினைவு தோன்றிய உடன், நம் சிறுமையும்,