பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 347 நுழைவரியான் என்று பாடுகிறார். அதாவது, நூலறிவு கொண்டு அவனை அறியமுடியாது என்றபடி நூலறிவு என்று கூறியமையின் இந்த அறிவு மால், பிரமன் தேவர்கள் ஆகியோருடைய அறிவுடன் ஒன்றாக வைத்துப் பேசப்படுகிறது. நூலறிவால் அறியப்படாதவன் என்று சொல்வது சரி. ஆனால், நுழைவரியான் என்றல்லவா அடிகளார் பேசுகிறார். நுழைதல் என்ற சொல்லுக்குப் பொருளென்ன? ஒரு கட்டிடத்தில் எல்லாப் பக்கங்களும் மூடியிருக்க, வாயிற்புறம் மட்டும் நுழையவும், வெளிவரவும் ஒரு வழியாக அமைந்துள்ளது. வீட்டின் கதவு மூடியிருந்தால் யாரும் அதனுள் நுழைய முடியாது என்பது உறுதி. ஒரு வீட்டிற்குள் நாம் நுழைய வேண்டும் என்றால், அந்த வீட்டுக்காரர் வாயிலைத் திறந்து வைத்திருந்தால் ஒழிய நாம் உள்ளே போக முடியாது என்பது தேற்றம். அதேபோலப் பரம்பொருளும்கூடத் தன்னை அணுகுகின்றவர்கள் உள்ளே நுழைவதற்கு, அருள் என்ற வாயிலைத் திறந்துவைத்திருக்க வேண்டும். அந்த வாயில் திறந்திருந்தால் ஒழிய, அதனுள் நுழைவது என்பது இயலாத காரியம். நுழைவது ஒரு புறம் இருக்கட்டும். அந்த வாயில் திறக்க வேண்டும் என்றும், அவன் திருவடிகளைத் தொழ வேண்டும் என்றும், வேண்டிக்கொள்வோர் எவ்வாறு வேண்டிக்கொள்வது, யாரை வேண்டிக் கொள்வது, என்ற வினாக்கள் தோன்றுமன்றே! இதற்கு விடையைப் பிறிதோர் இடத்தில் 'அவனருளாலே அவன் தாள் வணங்கி’ (திருவாச 1-18) என்று கூறியுள்ளார். மால் முதல் நூல்கள் வரை நுழைவதற்கு அரியான் அவன் என்றால் வேறு வழி என்ன? உண்டு என்கிறார் அடிகளார். மாலும் பிரமனும் அவனுள் நுழைய முடியாவிட்டாலும், அவன் நம்முள் நுழையலாம்