பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 யாவரையும் படைத்துக் காத்து அருளும் பரம்பொருளே கூடத் தான் படைத்தவர்களுள் சிலரைத் தண்டனையாக இடையே அழிக்க வேண்டி வருகிறது. ஆதலால், மக்களுக்குத் தேவையான அறத்தை நால்வர்க்கு உரைத்தான் என்றாலும், அவன், திரிபுரத்தை எரித்து அழித்தான் என்ற கருத்தை அடிகளார் பெறவைக்கிறார். திருச்சாழலில் வரும் இறுதிப் பாடல் அறமுரைத்தலின் மற்றொரு பகுதியை எடுத்துக்காட்டுகிறது. நான்மறையின் உட்பொருள் என்ற தொடர் இங்குப் பயன்படுத்தப் பெறவில்லை; நால்வர் என்ற சுட்டுப்பெயரும் பயன்படுத்தப் பெறவில்லை. அதற்குப் பதிலாக அருந்தவர்' என்ற பொதுப்பெயரே இங்குப் பேசப்பெற்றுள்ளது. எனவே, 270ஆம் பாடலில் குறிக்கப்பெற்ற சனகாதி முனிவர் நால்வரே இங்கும் குறிக்கப்பெறுகின்றனர் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. தவத்தை மேற்கொண்டு ஒழுகும் முனிவர் பெருமக்களுக்கு ஆலின் கீழிருந்த பெருமான் அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருடார்த்தங்கன் நான்குபற்றியும் கூறியது ஏன் என்பது வினா, துறவு மேற்கொண்டு வனத்திடை வாழும் இவர்கள் மக்கள் கூட்டத்தை விட்டு ஒதுங்கிப் பல காலமாய்த் தனித்திருத்தலின், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் மறந்து, வீடு என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டனர். இவ்வுலகிடை வாழ்கின்ற காலம்வரை காட்டில் வாழும் இவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் சமுதாயத்தோடு ஒட்டி உறவாடவேண்டி வரும்; ஆதலால்தான் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் அவர்களுக்கு உரைத்தான். இந்த நான்கினையும் அறிந்தாலன்றி உலக இயற்கையை அவர்கள்