பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 359 அறியமுடியாதுபோய்விடும்; ஆதலால், அவர்கட்கு இந்த நான்கினையும் அருளிச்செய்தான் என்க. திருச்சாழலில் இறைவன்பற்றிய சில பொதுக் கருத்துக்களை முன்னும் பின்னும் கூறியுள்ளார். அவன் இருப்பிடம், உடை, நஞ்சை உண்ணல் ஆகியவற்றைப் பேசியபிறகு, அவன் உமையோடு இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இப்படியிருந்தும் ஆணவம் காரணமாகத் தக்கன் போன்றவர்கள் செய்த தவறுகளைத் தண்டித்துத் திருத்தினான். அடுத்து உயிர்கள்தோறும் உறைகின்ற காரணத்தால் பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் சலித்துக்கொண்டே இருக்கின்றன என்பதைக் கூறினார். இவற்றையெல்லாம் கூறிவந்த அடிகளார், தன்னை நாடிவந்த அருந்தவர்களை இரண்டு வகையாகப் பிரித்து அவரவர்களுக்கு ஏற்ற உபதேசத்தை அருளினான் என்கிறார். முதலில் சொல்லப்பட்ட நால்வரும் எக்காலத்தும் உலகிடை வாரார் ஆதலின் அவர்கட்கு வேதத்தின் உட்பொருளை உரைத்தான். இரண்டாவது கூட்டத்தார் அருந்தவரே ஆயிடினும், இன்னும் உலக பந்தம் உடையவர்களே, ஆதலின், உலகியற்கையை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தங்களையும் அவர்களுக்கு உபதேசித்தான் என்கிறார். - தாம் பெற்ற அனுபவத்தைச் சொல்லும் தான் அந்தம் இல்லான்’ (திருவாச. 264) என்று தொடங்கும் ஒரே ஒரு பாடலைத் தவிர திருச்சாழலின் எஞ்சியுள்ள பாடல்கள் அனைத்தும் திருவாசகத்தில் காணப்படும் பொதுத்தன்மை இல்லாமல் தனித்து நிற்பதைக் காணலாம்.