பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 363 என்னுள்ளே தன் இணைப்போது அவைஅளித்து (திருவாச. 288) என்பனவாகும். இவற்றையல்லாமல் திருவடியை நினைந்து பாடியவை வார்கழல் (28), குரைகழல்கள் (285, நிறைகழலோன்(287, பொன்னார் திருவடி(29), சீரார்திருவடி(292), பூவார்கழல் (294) என்பனவாகும். திருப்பூவல்லியின் இருபது பாடல்களில் பத்து இடங் களில் திருவடியை நினைவிற்கொண்டு, பாடும்பொழுதே தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை 'வணங்கத் தலைவைத்து (திருவாச: 28) என்ற பாடலில் பேசுகிறார். (Tor சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் வாய்ந்தது. ஆதலின் வணங்கத் தலைவைத்து’ என்ற சொல்லிலேயே, உடல் முழுவதாலும் வணங்கவேண்டும் என்ற கருத்தைப் பெறவைத்தார். மனம், மொழி, மெய் என்பவற்றுள் தலையாலும், உடம்பாலும் வணங்கவேண்டும் என்று மெய்யைக் குறிப்பிட்டார். அடுத்துள்ளது மொழி பயனற்ற வார்த்தைகளைப் பேசித் திரியாமல், அவன் திருவடிப் புகழையே பேசவேண்டும் என்ற கருத்தை வாய், வார்கழல் வாழ்த்தவைத்து’ என்றார். மூன்றாவதாக உள்ளது மனம். இது விந்தையான ஒரு பகுதியாகும். பல சமயங்களில் தன்னை உடையவரை இந்த மனம் ஏமாற்றும் இயல்புடையது. மனம் தம் அதிகார எல்லைக்குள் இருப்பதாகப் பலரும் நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால், மனத்தின் கோணங்கித்தனத்திற்கு இவர்கள் அடிமையாக உள்ளனர். உடலும், சொல்லும், எந்த வழியில் சென்றாலும், அதே வழியில் மனம் செல்லுமென்று சொல்ல முடியாது. பல சமயங்களில் தனியே இருப்பதே மனத்திற்குக் கேட்டை விளை விக்கின்றது. எந்தக் கூட்டத்தில் அல்லது எந்த இனத்தில்