பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மனிதன் சேர்ந்திருக்கிறானோ, அந்தக் கூட்டத்திற்கு அல்லது இனத்திற்கு இயையவே மனம் தொழிற்படும். 'மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்து உளதாகும் அறிவு” (குறள்: 454) என்பது வள்ளுவன் வாய்மொழி. இந்த உண்மையை நன்கு அறிந்த புத்தன் 'சங்கம் சரணம் கச்சாமி என்று உபதேசித்தான். இந்தச் சங்கம் என்ற சொல்லையே நம் முன்னோர் அடியார் கூட்டம் என்றும் தொண்டர் கூட்டம் என்றும் கூறினர். ‘தொண்டரொடு கூட்டு கண்டாய்” என்று தாயுமான சுவாமிகளும், அபிராபி பட்டரும் கூறியவை இங்கு நினைவிற் கொள்ளத் தக்கன. இதே கருத்தை அடிகளார் 'இணங்கத் தன் அடியார் கூட்டமும் வைத்து' (திருசா: 28) என்று பாடியுள்ளார். அடியார் கூட்டம், என்றும் உள்ளதாகும். நம்மைப் பொறுத்தவரை, அக்கூட்டத்தைச் தேடிச்சென்று அவர்கள் எண்ண ஓட்டங்களோடு நம்முடைய எண்ண ஓட்டங் களும் ஒன்றாக இணங்கும்படி செய்யவேண்டும். இது நம்முடைய பொறுப்பாகும். அதுவும் இறைவன் திருவருள் இருந்தாலன்றி நடைபெறாது. ஆதலின் சீர் அடியார் கூட்டத்தில் தன் (மனம்) இனங்கவைத்து' என்கிறார் அடிகளார். தலை, வாய் முதலியவை எதற்காகப் படைக்கப் பெற்றுள்ளன என்பதைக் கூறினார் அடிகளார். இவற்றைச் செம்மையான முறையில் பயன்படுத்தாமல், யாரோ ஒருவன் கொடுக்கும் அவி உணவிற்கு ஆசைப்பட்டுச் சென்றவர்கள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் தவறிழைத்தார்கள் ஆதலின் அவர்களைப் பட்டியலிட்டு, அவர்கள் பெற்ற தண்டனையையும் (278ஆம், 289ஆம் பாடல்களில்) கூறியுள்ளார். இராவணன், அந்தகாசுரன் என்ற இருவரும், தக்கன் வேள்விக்குச் செல்லாவிடினும், இறைவனை இன்னான் என்று அறிந்திருந்தும்