பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 365 அவனுக்குரிய வணக்கம் செய்யாமல் அகந்தை காரணமாக மாறுபட்டார்கள் ஆதலின், அவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற அடியார்கள் பலர் அடிகளார்க்கு முன்னும் உண்டு; பின்னும் உண்டு. ஆனால், அமைச்சர் கோலத்தில் வந்த ஒருவரை எவ்வித முன்னேற் பாடும் இன்றி இழுத்துப் பிடித்துப் பலரும் காணத் திருவடி தீட்சை செய்ததும் ஆட்கொண்டதும் அடிகளாருக்கு மட்டுமே நிகழ்ந்ததாகும். இதனையே அடிகளார் ஊன் (உடம்பு நாடி நாடிவந்து உள்புகுந்தான் உலகர் முன்னே’ (திருவாச: 279) என்கிறார். இக்கருத்தைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் திருவாசகத்தில் பல இடங்களில் கூறியுள்ளாரேனும் இங்கும் தான் என்னை ஆட் கொண்டது எல்லாரும் தாமறிவார்’ (திருவாச. 227 என்ற இடத்திலும் வெளிப்படையாகக் கூறியுள்ளார் என்பதை அறிதல்வேண்டும். 'தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாமறிவார்’ என்று அடிகளார் கூறியிருப்பது சிந்திக்க வேண்டிய பகுதியாகும். தனிப்பட்ட ஒருவரை இறைவன் ஆட்கொண்டான் என்பதையோ அவருக்குத் திருவருள் பாலித்தான் என்பதையோ பிறர் யாரும் அறியமுடியாது என்பது இந்நாட்டு மரபு. திருவருளை நேரடியாகப் பெற்றவர்களும்கூட, அதனை வெளியே சொல்கின்ற மரபு இல்லை. இதனையே, காரைக்கால் அம்மையார் எண்ண ஒட்டமாகச் செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரைசெய்யார் பெ.பு. காரை. புரா: 27) என்று சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார். அப்படியானால் தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாமறிவார் என்று அடிகளார் கூறியதன் அடிப்படை என்ன? அமைச்சர் கோலத்தில் குதிரையின்மேல் ஒருவர் வருகிறார். பல சீடர்களோடு குருந்த மரத்தடியில் மானிட