பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வடிவில் ஒரு துறவி அமர்ந்துள்ளார். குதிரையிலிருந்து இறங்கிய அமைச்சர், அந்தத் துறவியிடம் சென்று நெடுஞ்சாண் கிடையாக அவரை வணங்குகிறார். அந்தக் குருநாதர் தம் திருவடியை அமைச்சரின் தலைமேல் வைக்கின்றார். சில விநாடிகளில் மானிட வடிவில் இருந்த குருநாதர், சீடர்களுடன் மறைந்துவிடுகிறார். இத்தனை நிகழ்ச்சிகளும் அடிகளாரைச் சுற்றியிருந்த அத்தனைபேரும் தத்தம் ஊனக்கண்களால் கண்ட காட்சிகளாகும். இதுவரை நடைபெற்ற புற நிகழ்ச்சிகளையும், மானிட வடிவிலிருந்த குருநாதரையும் அத்தனை பேரும் கண்டது உண்மைதான். திருவடி தீட்சையை அனைவரும் கண்டார்கள். ஆனால், அதன் பொருள் என்ன என்பதையும், அதன் பயன் என்ன என்பதையும் அடிகளாரைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. அறியவே. முடியாதபோது உணர்விற்கு அங்கு வேலையே இல்லை. - குருநாதர் திருவடி தலையில் பட்டவுடன், ஒரு மனிதன் மகாத்மாவாக மாறிவிடுகிறான். மாறிய பிறகு, அவருடைய புறக்கண்களுக்கு அதுவரை தெரிந்த மானிட குருநாதர் உமையொருபாகனாகக் காட்சியளிக்கிறார். இவையொன்றும், சுற்றி நின்றவர்களுக்குத் தெரியாது. திருவருள் மறைமுகமாக வந்து ஒருவருக்குமட்டும் அருள் செய்வதும் உண்டு. இதற்கு மானிட குருநாதர் தேவையில்லை. புனிதவதியாருக்கு மாம்பழத்தைத் தந்தவன் தன்னை இன்னான் என்று காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், வேறு சில நிகழ்ச்சிகளில் அந்தத் திருவருள் மானிட வடிவு தாங்கிப் பிறர் காண வந்து, சில செயல்களைச் செய்வதும் உண்டு. பல சமயங்களில், யாருக்காக இந்த மானிட வடிவுடன் வருகிறானோ அவர்களேகூட இந்த மானிடனாக வந்தவன் யாரென்று