பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 367 தெரிந்து கொள்வதில்லை. அவன் மறைந்தபிறகு, மறைந்துவிட்டான் என்ற காரணத்தால் சுற்றியிருந்தவர்கள், வந்தவன் இறைவன் என்று அறிகின்றனர். வந்தவன் மறைந்து, உமையொருபாகனாகக் காட்சி தரும் நிலையை, யாருக்காக வந்தானோ அவரைத் தவிர வேறு யாரும் காணமுடியாது. திருவருட்டுறையில் கோயிலில் புகுந்த கிழ வேதியர் மறைந்ததை அனைவரும் கண்டனர். அசரீரியாக அவன் நம்பியாரூரருக்கு இட்ட கட்டளையைக்கூட அனைவரும் கேட்டனர். இவைகூட நம்பியாரூரர் உடனிருந்த புண்ணியத்தால் நிகழ்ந்தவையாகும். அசரீரி கேட்கும் அதே நேரத்தில், இடபாருடனாய்க் காட்சி தரும் அவனை, நம்பியாரூரர் ஒருவர்மட்டுமே காண முடிந்தது. - 'எனக்குப் பால் தந்த பெருமான் இவன் அன்றே’ என்று பாடிக்கொண்டு, ஆட்காட்டி விரலைப் பிரம புரத்தின்மேல் சுட்டிக் காட்டினார் சிறிய பெருந்தகையார். உமையொருபாகன் காட்சி, அவருக்கு மட்டுந்தான் கிடைத்ததே தவிர, அவர் தந்தையான சிவபாத விருதயருக்குக் கிட்டவில்லை, கிட்டவும் முடியாது. சிவபாதவிருதயர் இறைக்காட்சி பெற்றிருப்பாரேயானால், திருவிழிமிழலை சென்று யாகம் செய்யப் பொன்வேண்டும் என்று மகனிடம் கேட்டிருக்க மாட்டார். அடிகளார் வரலாற்றிலும் இந்நிலையே உள்ளது. ஆனால், எல்லாரும் தாம் அறிவார்’ என்று அடிகளார் கூறியது சரியா என்று சிந்தித்துப் பார்த்தால், உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். பற்பல இடங்களில் நாயினும் கடையேன்” என்றும் கள்வன், கடியன், கலதி (திருவாச: 233) என்றும் தம்மைக் கூறிக்கொள்ளும் அடிகளார், அவ்வளவு தாழ்ந்தவனாகிய தமக்கு அருள் செய்தான்