பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 369 பிறவி நீங்க என்று பொருள் கொள்வது அவ்வளவு சரியானதன்று. பிண்டம் என்பது உடல்மேல் கொண்டுள்ள பற்று என்ற பொருளையே தந்துநிற்கின்றது. 'பிட்டமுது செய்தருளி தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடி' என 290 ஆம் பாடலில் வரும் பகுதி ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். இரண்டு திருவிளையாடல் புராணங்களும் திருவாதவூரடிகள் புராணமும் ஒரு செய்தியைச் சொல்வதில் மிகுந்த ஒற்றுமையுடன் விளங்குகின்றன. வந்தியம்மையின் பிட்டை வாங்கி உண்டருளினான். வெள்ள அடைப்புப் பணியை மேற்பார்வை செய்துகொண்டுவந்த பாண்டியன், கையில் பிரம்புடன் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக்கொண்டு வந்தான். விந்தியம்மையாரின் பங்கு அடைபடாமல் இருக்கக் கண்டு வந்தியின் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். இம்மூவர் கருத்துப்படி தண்டை வைத்திருந்தவன் பாண்டியன்; அப் பிரம்பால் அடித்தவனும் பாண்டியன்தான்; அடியைப் பெற்றவன்தான் வந்திக்குக் கூலியாளாய் வந்தவன். இக்கருத்தையே வள்ளல் பெருமானும், வண்பட்ட கூடலில் என்ற பாடலில் நின் பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில்’ என்று பாடியுள்ளார். இப்பகுதியில் வரும் 'தன்னை என்பதற்குச் சொக்கனே எனப் பொருள் கொண்டு, இச்சொக்கன் தன்னைப் பாண்டியன் தண்டால் அடித்து ஏற்படுத்திய புண்ணைப் பாடி என்று விளக்கியுள்ளனர். பாடல் அமைந்துள்ள முறையில் வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இதற்கு, தண்டாலே பெற்ற புண் என்றும், பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண் என்றும் கூறலாம். இவ்வாறு பொருள் கொள்வதற்குப் பாண்டியன், தன்னை என்று பிரித்து நாக்காமல் பாண்டியன்தன்னை என்று ஒருசொல் நீர்மைத்தாகக் கொண்டு பாண்டியனைப் பணிகொண்ட