பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆதலால் அதனை எல்லோருக்கும் செய்திருப்பான் என்று நினைக்கின்றார். அவ்வாறு அவர் நினைத்தார் என்பதற்கு ‘எந்தரமும் ஆட்கொண்டு’ என்ற தொடரைப் பல பாடல்களில் அவர் பயன்படுத்தியதே சான்றாகும். இப்பெருமக்கள் உலகம் முழுவதிலும் வாழும் மக்கள் தம்மைவிட மிக உயர்ந்தவர்கள் என்று கருதும் இயல்புடையவர்கள். அஸ்தினாபுரத்தில் தீயவர்கள் யாருமே இல்லை என்று தருமன் கூறியதும் இதற்குச் சான்றாகும். திருவடியைத் திருவாதவூரர் தலையில் வைத்தவர், உடனே மறைந்துவிட்டார் என்பதால், அவர் இறைவனாக இருக்குமோ என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தமட்டில், இந்தக் காட்சியைக் காணுமளவிற்குத் திருவருள் உதவியதே தவிர, அதற்குமேல் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. மேலைப் பாடல்களுள் உறவினர், சுற்றத்தார், உலக பந்தம் ஆகியவற்றை அறுத்து அருள்செய்தான் என்று கூறிய அடிகளார், வேறு இடங்களில் என் பிறவியை வேரறுத்தான் என்றும் கூறியுள்ளார். ஆக, இனிப் பிறப்பில்லை என்பது உறுதி. ஆனால், எடுத்த இப்பிறப்பில் உறவு முதலியவற்றில் கொண்ட பந்தத்தை அறுத்தான் என்று பாடிவிட்டாலும், தேகபந்தம் (எடுத்துள்ள இந்த உடல்மேல் கொண்டுள்ள பற்று நீங்குவது ஏறத்தாழ இயலாத காரியம். உடல் என்ற ஒன்றிருக்கும்வரை, தேகப் பிரக்ஞை என்ற ஒன்று இருக்கும்வரை, உடல்மேல் உள்ள பற்று நீங்குவது மிகமிகக் கடினமாகும். திருவருள் துணை என்ற ஒன்று இருந்தாலொழிய, எவ்வித முயற்சியாலும் இந்தப் பந்தத்தைப் போக்க முடியாது. திருப்பெருந்துறை நாயகன் அதையும் போக்கினான் என்பதைப் பேராசையாம் இந்தப் பிண்டம் அறப் பெருந்துறையான் சீரார் திருவடி என்தலைமேல் வைத்த பிரான் (திருவாச 284) என்று பாடுகிறார். இங்கு, பிண்டம் அற' என்பதற்குப்