பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 புண் என்று கொண்டுகூட்டுச் செய்வது நலம். இவ்வாறு கொள்ளும்போது புராணங்களில் கூறப்பட்ட செய்திகளுக்கு மாறாக எதுவும் கூறப்படவில்லை. பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண் என்பது எவ்வாறு பொருந்தும்? புண்ணைப் பெற்றவன் சொக்கன், அப்படியிருக்க, அந்தப் புண் பாண்டியனை எவ்வாறு திருத்திற்று அல்லது பணிகொண்டது என்ற வினா நியாயமானது. வரலாற்றில் இடம் பெறாத அரிமர்த்தன பாண்டியன் என்ற பெயரைச் சொல்லித் திருவிளையாடல் புராணங்களும், திருவாதவூரடிகள் புராணமும் பேசுகின்றன. தளவாய்புரம் செப்பேடு முதலியவற்றால், அடிகளார் காலத்தில் வாழ்ந்தவன் இரண்டாம் வரகுண பாண்டியன் என்பது தெளிவாகிறது. அந்தச் செப்பேடு இவனை மாபெரும் சிவபக்தனாகப் பேசுகிறது. அன்றியும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்துப் பிள்ளை, இந்த வரகுணனின் பக்திச் சிறப்பைப் பல படியாக எடுத்துக்கூறி, இறுதியில் பெரிய அன்பின் வரகுண தேவனும் என்று பாடுவது நோக்கத்தக்கது. அடிகளாரேகூட ‘நரகொடு சொர்க்க நானிலம் புகாமல் பரகதி பாண்டிற்கு அருளினை போற்றி (திருவா:4-218, 14) என்று பாடுவதாலும் அடிகளார் காலத்து வாழ்ந்தவன் மாபெரும் சிவபக்தனாகிய வரகுண பாண்டியனே என்பது தேற்றம். இந்தப் பாண்டியன், ஏனைய பாண்டியர்கள்போல் அல்லாமல், வாழ்க்கையில் மாபெரும் சிவனடியானாய் மாறுவதற்கு ஏதோ ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும். வந்தியின் கூலியாள் முதுகில் பட்ட புண், தன் னால் ஏற்பட்டது என்பதையும், அப்புண்ணைப் பெற்றவன் ஆலவாய்ச் சொக்கன்தான் என்பதையும் அவனை அடித்த பாதகச் செயலைச் செய்தது தான்தான் என்றும் உணர்ந்த