பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 371 பின், வரகுணன் வாழ்க்கையே முற்றிலுமாக மாறியிருக்க வேண்டும். அதனாலேயே மானிடம் பாடாத பட்டினத்துப் பிள்ளையும், அடிகளாரும் அவனைப் போற்றிப் புகழ்ந்துள் ளனர். இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு பார்த்தால் தண்டாலே பெற்ற புண், பாண்டியனைப் பணிகொண்ட புண்தான் என்று பொருள்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. திருவுந்தியார் பக்தியனுபவத்தில் ஈடுபட்டு, அந்த அனுபவத்தைக் கூறும் ஏனைய பாடல்கள்போல் அல்லாமல் திருவுந்தியார் தனித்து நிற்கின்றது. 'வளைந்தது வில்லு' என்ற திருவுந்தியாரின் முதல் பாடலும் இதன்பின் வருகின்ற பாடல்களும் சிவபெருமானது பேராற்றலைக் குறித்தே பெரும்பாலும் வருவனவாகும். . போர் தொடங்குவது முதல் நிகழ்ச்சி; வில்லை வளைக்கின்ற செய்ல் அடுத்ததாகத்தான் நடைபெறும். இந்த முறையை மாற்றி அடிகளார் வில் வளைந்தது அதனால் பூசல் நிகழ்ந்தது என்ற கருத்துப்படப் பாடியுள்ளது கொஞ்சம் சிந்திக்கத்தக்கது ஆகும். முப்புரத்தில் உள்ளவர்கள் எத்தகைய தீயசெயலைச் செய்யினும் நேரிடையாகச் சிவபெருமான்மேல்போர் தொடுக்கவில்லை. இன்னும் கூறப்போனால், அவர்கள் மூவரும் சிவபக்தியிலும், சிவபூசையிலும் மிகுதியும் ஈடுபட்டிருந்தனர் என்று கதை பேசுகின்றது. அப்படியிருக்க, சிவபெருமான் அவர்களை அழிக்கப் புறப்பட்டார் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும்? உண்மையைக் கூறப்போனால் இறைவன் புறப்பட்டது சிவபூசை செய்த அவர்களை அழிக்கவன்று. ஆணவம் காரணமாக அவர்கள் பிறருக்கு இழைத்த கொடுமைகளை அழிக்கவே புறப்பட்டார்.