பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை, 375 இரும்பு, வெள்ளி, பொன்னால் செய்த கோட்டைகளும் அவற்றோடு தொடர்புடைய ஏனைய பொருட்களும் எரிந்து சாம்பலாயின. அவைமட்டுமா எரிந்தன? இத்துணைப் பொருள்களுடன் மூலமாக நின்றது அம்மூவரின் அகங்காரமாகும். திரிபுரத்தை அழித்த பெருமான் அவர்கள் அகங்காரத்தையும் சேர்த்தல்லவா அழித்தான்? அதனையே, 'ஒருங்குடன் வெந்தவாறு உந்தீ பற’ என்று பாடுகிறார். ஒருங்குடன் என்ற சொல் அவர்கள் வைத்திருந்த துணைப் பொருள், அகங்காரம் ஆகிய அனைத்தையும் குறிப்பதற்குரிய சொல்லாகும். இந்தச் சிந்தனை தோன்றுவதற்குக் காரணம் திருமூலரின், அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காளியம் அப்புரம் எய்தமை யாரறி வாரோ (திருமந்: 343) என்ற பாடலே ஆகும். மூலப் பரம்பொருளாக உள்ளவன் தன்னால் படைக்கப்பட்டுத் தன் அதிகாரத்தின்கீழ் இருந்த திரிபுராதிகளை அழிப்பதற்கு, தேர் ஒன்றைத் தயாரித்து அதன்மேல் ஏறிக்கொண்டு வில்லையும் கையிலேந்திச் சென்றான் என்பது அவனுடைய இறையாண்மைக்குப் பொருந்துமாறில்லை. தொன்றுதொட்டு வழங்கிவரும் இக்கதையில் உள்ள குறைபாட்டை அறிந்த திருமூலர், முப்புரம் செற்றனன் என்று சொல்பவர்கள் மூடர்கள் என்று கூறிப்போனார். இதே கருத்தை, அடிகளார் உடன்பாட்டுச் சொற்களைப் பயன்படுத்தி, மிக்க சமத்காரத்துடன் பூசலோ நிகழவில்லை; வில்லோ வளையவில்லை என்ற எதிர்மறைப்