பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திரிபுரக் கதையைப் பொறுத்தமட்டில், வில்லை வளைத்தாகவோ, அம்பு எய்ததாகவோ சிவன் போரிட்டதாகவோ ஒரு குறிப்பும் இல்லை. அப்படியிருக்க, வளைந்தது வில்லு விளைந்தது பூசல் என்று அடிகளார் கூறுவதை மறுபடியும் சிந்தித்தால் இவற்றிற்கு எதிர்மறையாகப் பொருள் கொள்வது சரியோ என்று தோன்றுகிறது. அதாவது வில் வளைக்கப் படவில்லை; பூசல் ஒன்றும் நிகழ்த்தப்படவில்லை. அப்படி யிருந்தும் முப்புரம் உளைந்தன என்கிறார் அடிகளார். உளைதல் என்பது மனம், உடல் இரண்டிலும் பெருந் துன்பம் அடைதலைக் குறிக்கும். பூசல் ஒன்றும் ஏற்படாதபொழுது, வில் வளைக்கப் படாதபொழுது இதுவரை மனஉளைச்சல் எதுவுமின்றித் தம் அகங்காரம் காரணமாகப் பிறருக்குப் பெருந்துன்பம் செய்து வந்த திரிபுராதிகள், இப்பொழுது உளைந்தனர். அப்படி என்றால், அவர்களின் உளைச்சலுக்குக் காரணம் என்ன? அவர்களுடைய ஆணவமே அவர்களை அழிக்க ஏதுவாயிற்று. பிறருக்குத் துன்பம் செய்து, அதில் மகிழ்ந்தவர்கள் அல்லவா அவர்கள்? எத்துணையோ பேருக்கு இவர்கள் உண்டாக்கிய மன உளைச்சல் இப்பொழுது இவர்களைத் தாக்கிற்று. அதனையே, அடிகளார் உளைந்தன முப்புரம்’ என்று பேசுகிறார். இதுவரை, அவர்கள் அடைந்த உனைச்சல் அவர்கள் செய்த வினையின் பயனாகவே அவர்களுக்கு ஏற்பட்டது. தாம் செய்த வினைக்கேற்பத் தண்டனை அனுபவித்தப் பிறகு அவர்கள் உய்கதி அடைய வேண்டும். பிறருக்குச் செய்த துன்பமும் இவர்கள் அடைந்த உளைச்சலும் சமமாகும்பொழுது உய்கதி பெறவேண்டிய நேரம் இவர்களுக்கு வந்தது. இந்தநிலையில்தான் முப்புரம் எரிக்கப்படுகிறது. பிறருக்குத் துன்பும் செய்த கருவிகளாகிய