பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 373 தருக்குக் கொள்ளவும், மூன்று கோட்டைகளையும் ஒருசேர அழிக்கச் சிவபெருமான் தன்னையே பயன்படுத் தினான் என்று பாசுபதம் தருக்குக் கொள்ளவும் இடந்தரு தலின் அடிகளார். இக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. 'ஒன்றும் பெருமிகை உந்தீபற்’ (29) என்று பாடியதால் எந்த அம்பும் பயன்படுத்தப் பெறவில்லை என்பதைக் கூறினாராயிற்று. அடுத்துத் தச்சு விடுத்தலும், தாமடி இட்டலும், அச்சு முறிந்தது என்று உந்தீபற’ (297) என்று பாடியதால் தேவதச்சன் பொற்றேரையும் சிவபெருமான் பயன்படுத்த வில்லை என்று கூறுகிறார். இதனால் வாயு புராணக் கதையை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார் என்பது பெற்றாம். ஆனாலும், வாயு புராணக் கதை தமிழ்நாட்டை விட்டுப் போகவில்லை என்பதை அறியமுடிகிறது. இக்கதை போகாததுமட்டு மன்றி புதியபுதிய வடிவுடன் பிற்காலத்தில் பேசப்பெற்றது. பொற்றேருக்குப் பதில் பூமி தேராயிற்று; சூரிய சந்திரர் சக்கரங்களாயினர்; மாமேரு வில்லாயிற்று; வாசுகி நாணாயிற்று; திருமால் அம்பாயினார். விநாயகரை வணங்காமல், சிவபெருமான் தேரில் ஏறியதால் விநாயகர் அச்சை முறித்தார் என்ற வகையில் கதை வளர்ந்தது. இதனையே அருணகிரியார் 'முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிதிரா (திருப்புகழ்:) என்று பாடுமளவிற்கு வாயுபுராணக் கதை முழுமாற்றம் பெற்றுவிட்டது. அடிகளார் கூற்றிலும், பிற்காலக் கதையிலும் ஒரு கருத்து மாறாமல் இடம்பெற்றுள்ளது. அதாவது சிவபெருமான் போர் என்ற ஒன்றைச் செய்யாமலும், அம்பு ஒன்றை எய்யாமலும் சிரித்தே திரிபுரத்தை எரித்தான் என்பதே அப்பொதுக் கருத்தாகும்.