பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பின்னுரை 377 அடுத்த இரண்டு பாடல்களில் ஆணவத்தால் துன்புற்றவர் கதைகளே பேசப்பெறுகின்றன. அப்படியிருக்க உபமன்யு கதை இடையே வந்ததன் நோக்கமென்ன?, ஆணவம் முதலிய மலச்சேட்டைகள் இல்லாதது குழந்தை, ஆதலின், எந்த நேரத்திலும் குழந்தை விரும்பியதைத் தருகின்ற கருணை வள்ளல் அவன் என்பதை நினைவூட்டவே, ஆணவத்தால் அழிந்தோர் கதை நடுவே இக்கதையைக் கூறுகின்றார். ஆணவத்தால் தம்மையே பெரிதாக மதித்தனர் ஒரு கூட்டத்தார். ஆனால், கதிரவன் வெப்பத்தையும் தாங்கு கின்ற பேராற்றலுடைய முனியுங்கவர்கள் தம்முடைய ஆற்றலைப் பெரிதெனக் கருதி ஆணவம் கொள்ளாமல் உலகைக் காக்க வேண்டும் என்ற- உயிர்களைக் காக்க வேண்டுமென்ற கருணையால் உந்தப்பெற்றுக் கடமையைச் செய்கின்றனர். ஆதலின், அவர்களைக் காவல் செய்கின்றான் இறைவன் என்றார். தண்டனை தருகின்ற ஒருவன், ஆணவம் முதலிய குற்றமற்ற குழந்தைக்கும், தன்னலத்தைத் துறந்து பிறர்நலம் பேணும் முனிவர்களுக்கும் காவலாக உள்ளான் என்று கூறுவதால் இறைவனுடைய மறக்கருணை, அறக்கருணை என்ற இரண்டையும்பற்றிக் கூறினாராயிற்று. திருத்தோனோக்கம் முந்தைய பாடல்களில் நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோர் சிவபெருமானின் திருவடியைக் காணமுடியாமல் திகைத்து நிற்கின்றனர் என்ற கருத்துப் பலபடியாகப் பேசப்பெற்றது. இங்கேயும்கூட அதுபோன்ற கருத்துக்கள் 316, 319, 323, 324, 325, 326 ஆம் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், முன் போலவே இக்கருத்துக்களை விரிவாகக் கூறிவரும் அடிகளார்,