பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பின்னுரை 393 ஆனால், எது எப்படியாயினும் அடிகளாரின் வளர்ச்சியையும், அவர் அருள்பெற்றதையும், அவர் இறுதியில் வாழ்க்கை நடத்திய முறையையும் அறிந்து கொள்ள அன்னைப் பத்து உதவுகிறது. முகம் பார்க்கும் ஒரு சிறிய கண்ணாடியில் மிகப் பெரிய மரத்தின் முழுப் பிம்பமும் தெரிவதுபோல, அடிகளாரின் முழு வாழ்க்கையையும் வளர்ச்சி முறையையும் அன்னைப் பத்து என்ற சிறிய கண்ணாடியில் தெரிந்துகொள்ள முடிகிறது. குயிற் பத்து தும்பியும், குயிலும் அஃறிணை உயிர்கள்தான். தும்பியை விளித்து, அவன் சேவடிக்குச் சென்று ஊதுவாயாக என்பதுபோல, கோத்தும்பியில் இடம்பெற்ற பதினெட்டுப் பாடல்களிலும் சென்று தாய் கோத்தும்பீ என்றே பாடியுள்ளார். ஆனால், குயிற்பத்தில் இந்த நிலையை மாற்றிப் பாடுகிறார். நீ அவன் திருவடியிடம் சென்று ஊதுவாயாக’ என்று தும்பியை விளித்துக் கூறியவர், என்ன காரணத்தாலோ குயிற்பத்தில் அவனை வருமாறு கூவுவாயாக என்று பாடியுள்ளார். தும்பி ஊதும்போது, அதன் அடிப்படையில் தேனைத் தேடிச்செல்லும் இயல்பே அமைந்துள்ளது. தேன் தும்பியை நாடி என்றும் வந்தததில்லை. தும்பிதான் தேனை நாடிச் செல்லும் பழக்கத்தைப் பெற்றுவிட்டது. எனவே, 'திருவடியாகிய தேனை அடையவிரும்பிய தும்பியே அத்தேன் இருக்குமிடம் சென்று ஊதுவாயாக’ என்று கூறினார். ஆனால், குயில் இரைதேடிக் கூவுவதில்லை. நிறைந்த மகிழ்ச்சியில் கூவுகின்றது; துணைதேடியும் கூவுகின்றது. இரண்டு நிலையிலும் குயில் எங்கேயும் செல்வதில்லை. இருந்த இடத்தில் இருந்துகொண்டே துணையை