பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 395 பெருமை உடையவன் ஆயினும் இந்தப் பெருமைகளை யெல்லாம் துறந்து, வானமே தனக்கு வேண்டாம் என்று உதறி இம்மண்ணிடைப் புகுந்தான். புகுந்தததோடு மட்டுமன்று. நாயிற் கடைப்பட்ட என்போன்ற மனிதர்களை ஆட்கொண்ட வள்ளலாவான் அவன். என்போன்ற மனிதரைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டது இப்பொழுது நடைபெற்றது. இது ஒரு புறநடை என்று கருதிவிடாதே. வெகு காலத்திற்கு முன்னர் இராவணன் மனைவியாகிய மண்டோதரிக்கும் அருள் செய்தவன். முன்னர் மண்டோதரிக்கும், இப்பொழுது மனிதர்களுக்கும் அருள்செய்த வள்ளல் அவன் என்றால் உனக்கு மட்டும் செய்யாமலா போய்விடுவான் ? 'மனிதரை ஆட்கொண்டான் என்று பொதுவாகக் கூறினேன் என்று நினையாதே; என் சொந்த அனுபவத்தை இதோ கூறுகிறேன்: 'பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனை ஆண்டான்' (திருவாச 356) 'எந்தமராம் இவன் என்றிங்கு என்னையும் ஆட்கொண்டான்' (திருவாச 358) என்பதையும் நீ அறியவேண்டும். மனிதரை ஆட்கொண்டது. ஒருபுறம் இருக்கட்டும்; மனிதர்களுக்காகக் குதிரைச் சேவகனாகக்கூட வந்தான். இதனை ஏன் கூறுகிறேன் என்றால், அருள் செய்யவேண்டும் என்று அந்த வள்ளல் முடிவு செய்துவிட்டால், எந்த நிலைக்கும் கீழிறங்கி வருவான் என்பதை அறிவிக்கவே "நற்பரிமேல் வருவான்’ (திருவாச 353), பரிமிசை வந்த வள்ளல் (திருவாச. 354), "தாவி வரும் பரிப்பாகன் (திருவாச:355) என்று மூன்று முறை கூறியுள்ளேன். 'குயிலே! இவ்வளவு நான் கூறியும் உன் மனத்திலுள்ள அச்சம் நீங்கவில்லை என்பதை நான் அறிகின்றேன். கூறிய உதாரணங்களெல்லாம், வான் பழித்து மண்ணில் இறங்கிய அவன் மனித வடிவு கொண்டு மனிதருக்குத்தானே அருள் செய்தான் ? என்று கூறுகின்றன. நானோ பறவையினத்தைச்