பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 சேர்ந்த அழகில்லா குயிலாவேன். எனக்கு அவன் அருள் எவ்வாறு கிட்டும்' என்பதுதான் உன் மனத்தில் நிறைந்துள்ள கவலை. இப்பொழுது நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இந்த வள்ளலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. வாக்கு மனம் கடந்தவனாயினும், மனித வடிவில் குருவாக வந்தவனாயினும் ஒரு விநாடி நேரத்தில் “எவ்வுருவும் தன்னுருவாய்' (திருவாச 349) ஏற்கக்கூடியவன் என்பதை அறியாவாயாக. ஆகவேதான், அவன் ‘உன்னை உகப்பன் குயிலே, உன் துணைத் தோழியும் ஆவன்' (திருவாச. 354), ஆதலால், நீ அவனை வரக்கூவாய் என்று கூறி முடிக்கின்றார். குயிலைக் குயிலென்றே பொருள் கொள்ளாமல் மனம் குயிலாக உருவகிக்கப்பட்டது என்றும் கொள்ளலாம். அப்படியானால் உறுதிப்பாட்டை இழந்து வருந்தும் மனத்திற்கு உறுதியைக் தந்து அதன் அச்சத்தைத் தவிர்க்கும் முறையில் மேலே உள்ள கருத்துக்களை அடிகளார் வரிசைப்படுத்திக் கூறினார் என்று கொள்வதும் ஒரு முறையாகும். நம் காலத்தில் வாழ்ந்த, மகாகவி பாரதி குயிற்பத்தின் இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்து அதையே குயிற் பாட்டாக விரித்துப் பாடியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. திருத்தசாங்கம் குயிலை முன்னிலைப்படுத்தி இறைவன் பெருமைகளைப் பேசியதுபோலக் கிளியை முன்னிலைப் படுத்தி இறைவன் பெருமைகளை அடிகளார் பேசவிரும்பினார்போலும், தசாங்கம் என்ற பாடல்வகை பழைய இலக்கியங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினையைச் சந்திக்க விரும்பாத உரையாசிரியர் பலரும் தும்பியையும், குயிலையும் அகத்துறை