பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 397 வயப்படுத்தித் தூது அனுப்புவதாகப் பொருள் கூறினர். தசாங்கம் இவ்வகையிலும் இடம்பெறாது. குயிற்பத்தில் இறைவனது பெருமை பொதுவாகவும் அவனுடைய அருளுடைமை சிறப்பாகவும் பேசப்பெற்றதுடன் தனி மனிதராகிய தமக்கு அவன் அருள் செய்ததை அப்பத்தின் கடைசி இரண்டு பாடல்களில் பேசினார். நாம, ரூபம் கடந்து, வாக்கிறந்த பூரணமாய் உள்ள பரம்பொருள் மானிட வடிவு தாங்கி, குருநாதர் வேடத்தை மேற்கொண்டு தமக்கு அருளியதை அடிகளார் மறக்கவே யில்லை. பாண்டிநாடே பழம்பதியாகக் கொண்ட அவனே ஆலவாய், திருஉத்தரகோசமங்கை, ஆகிய இடங்களில் சிவலிங்கத் திருமேனி கொண்டும், திருப்பெருந்துறையில் குருநாதர் வடிவு கொண்டும் எழுந்தருளினான் என்பதை அடிகளார். நன்கு உணர்ந்திருந்தார். அன்றியும், வந்திக்குக் கூலியாளாய் வந்தவனும், குதிரைச் சேவகனாக வந்தவனும் அவனே என்பதை பின்னர்க் கண்டுகொண்டார். கூலியாளாய் வந்த அவனே, பாண்டியன்தன்னைப் பணிகொள்ளும் ஆற்றல் பெற்றவன் என்பதையும் கண்டுகொண்டார். ஏகமாய் உள்ள பரம்பொருள், குருநாதர் வடிவு முதல் கூலியாள்வரை அநேக வடிவெடுத்தாலும்கூட அரச வடிவு. கொண்டு அடிகளார் முன்னிலையில் வரவில்லை. இத்தனை வடிவுகளையும் தரிசித்த அடிகளார், பிரபஞ்சகாரணனாகிய அவனை அரசக் கோலத்தில் காண விழைகின்றார். அதன் பயனாக முகிழ்த்ததே திருத்தசாங்கம் ஆகும். இதிலும் ஒரு சிக்கல் தோன்றிற்று. ஒர் அரசன் என்றால், அவனுக்கு ஒரு நாடு இருந்துதீரல் வேண்டும். எவ்வளவு பெரிய அரசனாயினும், அவனுடைய நாடு எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது ஒர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும். மூவுலகையும் கட்டி யாள்பவன் என்ற பொருளில் திரிபுவனச் சக்கரவர்த்தி