பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 : திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்று பெயர்வைத்துக் கொண்டாலும், அவனுடைய நாடும் சில சதுரக் கிலோமீட்டர்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். இந்நிலையில், அந்த அரசனுக்கு என்று ஒர் ஆறு, ஒரு மலை என்பவற்றைக் குறிக்கவேண்டும். இங்கேதான் அடிகளாருக்குப் பெருஞ்சிக்கல் தோன்றுகிறது. அவர் கூறும் சிவபெருமானுக்குக் கைலை மலையும், கங்கை ஆறும் g2_@Ğ) LØłį)łł Iffğ$ உள்ளன. அவற்றையே அடிகளார் பாடியிருக்கலாம். ஆனால், நாட்டைக் குறிக்கவரும் அடிகளார் ஏதமிலா என்று தொடங்கும் 359ஆவது பாடலில் 'ஏழ் பொழிற்கும் (ஏழு உலகங்களுக்கும்) நாதன்' என்று கூறினாரேனும் அவனுடைய நாடு என்பது தென் பாண்டி நாடே தெளி’ என்று கூறிவிட்டார். இவ்வாறு கூறிய பிறகு கைலையையோ கங்கையையோ கூற இடமில்லை. தென்பாண்டி நாட்டின் தலைவன் என்று கூறிய பிறகு அவனுடைய ஊர்தி என்று இடப வாகனத்தைக் குறிக்க முடியாது. இந்த மூன்று சிக்கலையும் அறுப்பதற்கு, அடிகளார் ஒரு է-Յ:յ உத்தியைக் கையாள்கிறார். பாண்டி நாட்டிலுள்ள பொதிகை மலையைக் கூறினால் அதுவும் அவன் பெருமைக்குப் போதாதென்று எண்ணி, அவன்பால் நிறைந்திருக்கும் அருளையே அவனுக்குரிய மலை என்று கூறினார். ஆற்றைக் கூறவேண்டிய இடத்தில் வையை ஆகிய சிற்றாற்றைக் கூறுவது ஏற்றம் தருவதாக இல்லை. எனவே, அவனிடத்திருந்து புறப்பட்டு உயிர்களை நோக்கிப் பாயும் ஆனந்தமே அவனுடைய ஆறு என்று கூறினார். இனி, ஊர்தி கூறவேண்டிய இடத்துப் பாண்டி நாட்டுக்கு உடையவன் ஊர்தி இ.யம் என்று கூறிவிட்டால், பிற இடங்களில் அவன் ஊர்தி வேறாகும்