பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 399 போலும் என்ற ஐயம் தோன்றுமன்றோ! அதனைப் போக்கவே முன்னர்க் கீர்த்தித் திருஅகவலில் கூறிய வானிடை ஊர்ந்துசெல்லும் குதிரையையே இங்கும் 'வான்புரவி ஊரும் (திருவாச 363) என்று கூறினார். இறை அருளிலும், அனுபவத்திலும் மூழ்கித் திளைத்த அடிகளாருக்குத் தாம் பிறந்த நாட்டுப் பற்றை விட்டுக் கொடுக்க முடியவில்லை. பாண்டி நாடே பழம்பதி ஆகவும் (திருவாச 2-18) என்றும் தென்னாடு உடைய சிவனே' (திருவாச. 4-164) என்றும், தென்னன் திருவாச 197) என்றும் பல இடங்களில் பாடிச்செல்கிற அவர், திருத்தசாங்கத்தில் அவனுடைய நாடு கூறவந்த இடத்திலும் ‘தென்பாண்டி நாடே தெளி’ (திருவாச 359) என்று கூறிவிட்டார். நடுநிலையில் நின்று சிந்தித்தால் இதிலுள்ள குறை வெளிப்படத்தான் செய்கிறது. பெயர் நாமம்) கூறும்போது பாற்கடலான் முதலியவர்கள் கூறுவதுபோல் அவன் பெயர் தேவர் பிரான்’ (திருவாச:358) என்பதாகும் என்று கூறியது சாலப் பொருத்தமானதே. அத்தகையவனுக்கு ஆனந்தமும், அமைவது தெளிவாகிறது. எல்லாவற்றிற்கும், 'ஏழ்பொழிற்கும்’ தலைவனாக உள்ளவன் தென்பாண்டி நாட்டிற்கு உரியவன் என்று கூறுவது முரனுடையதாகும். இவற்றை யெல்லாம் மனதுட்கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஏனைய பாடல்களிலுள்ள பக்திச் சுவையோ, இறையனுபவச் சுவையோ ஒரு சிறிதும் இல்லாத இந்தத் தசாங்கத்தை, அடிகளார் ஏன் பாடினார் என்று விடை காண்டது கடினமாகவுள்ளது. திருப்பள்ளியெழுச்சி திருவாசகம் முழுவதிலும் L'ÉGE) இடங்களிலும் மிகுதியாகக் காணப்பெறுபவை இரண்டு கருத்துக்களாகும்.