பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 421 இந்த ‘நான்’ சாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இறையனுபவ உணர்வு மிகுதிப்படுகிறது. இந்த நான்' எவ்வளவு குறைந்தாலும் அது ஒரு கடுகளவு இருக்கின்றவரை இறையனுபவத்தில் முற்றிலுமாக மூழ்கிவிட (էքւգ-աTEl. உரை இறந்த உணர்வில் இறையனுபவம் தொடங்கி அது வளரவளர நான் அழிய, இறையனுபவம் வளர்ந்துகொண்டே சென்று, கடைசி நிலையில் 'நானே இல்லாத இறையனுபவ மயமாய் நிற்கின்ற ஒரு நிலை தோன்றுகிறது. அதனைத்தான் உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே' என்று பாடுகிறார்.