பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மூத்த திருப்பதிகம் என்ற பெயரில் பத்துப் பாடல்கள் பாடிய அடிகளார், இப்போது தனியே அமர்ந்துகொண்டு, ஒளிவடிவாக உள்ளத்துள் இருக்கும் ஒருவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கத் தொடங்குகிறார். அந்த ஒளியே இறையனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவத்தில் அடிகளாரிடம் தோன்றிய உரையிறந்த உணர்வு, இணையத் தொடங்கி, கடைசியாக உணர்வே лиф литъ இறையனுபவம் நின்றுவிடுகின்றது. இதனைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும். திருவாதவூார், அடிகளாராக மாற்றப்பட்டபின் இந்த நாடகம் தொடங்குகிறது. முதலில் அவனையும் அவன் தந்த அனுபவத்தையும் உரைகளால் கூற முயன்றார். அப்படி உரைகளில் கூறும்பொழுதே மெள்ளமெள்ள உணர்வினுள் புகலாயினார். இப்பொழுது உரை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி உணர்வினுள் அடங்கிவிடுகிறது. சற்று நேரத்தில் இந்த உரை, உணர்வு இாண்டுமே இறந்துவிடுகின்றன. என்றால், எஞ்சியிருப்பது எது? அடிகளாரின் ஆன்மா, உரை, உணர்வு இரண்டையும் கடந்து எதனையும் அனுபவிக்கக் கூடிய, முன்னர்க் கூறப்பட்ட உரை இறந்த உணர்வு வடிவாகவே நின்று விடுகிறது; இங்கு அடிகளார் என்று பிரித்துப் பார்க்க ஒன்றுமில்லை. ஆனாலும் அவருடைய ஆன்மா பெற்ற இரண்டாவது வடிவமாகும் இந்த உணர்வு. இதில் நான்' இல்லாமலும், எதிரே உள்ள இறைப்பொருளை உணரவும் அனுபவிக்கவும் முடிகிறது. இப்படிக் கூறும்போது சற்றுக் கவனத்துடன் பொருள் கொள்ள வேண்டும். 'நான் இல்லாமல் ஒன்றை அனுபவிக்க முடியுமா? என்றால், உலகியல் அனுபவங்களை நான்' இல்லாமல் பெறமுடியாது என்பது உண்மை, ஆனால், இறையனுபவத்தில் புகும்பொழுது இந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கின்றது. எவ்வளவுக்கெவ்வளவு