பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 419 தாகம், பாலுணர்வு போன்ற சாதாரண உணர்வுகளை இது குறித்துவிடும் என்று கருதிய அடிகளார், தாம் கூறவந்த உணர்வை இவற்றிலிருந்து பிரித்துக்காட்ட ஒர் உத்தியைக் கையாள்கிறார். உரை உணர்வு இறந்து நின்று என்பதால் வாக்கில் வெளிப்படும் சொல்லையும், உள்ளத்தில் தோன்றும் சாதாரண உணர்வையும் குறித்தாராயிற்று. இவை இரண்டையும் கடந்து நிற்கின்ற ஒன்று உண்டு. அதற்கென்று ஒரு தனிப்பெயரைக் கொடுக்க அடிகளாருக்கே முடியவில்லை. உரை, உணர்வு இறந்து நின்றதோர் உணர்வு என்று சொல்லப்படும் இரண்டாவது உணர்வு தொழிற்படும்போது சில செயல்கள் நடை பெறுகின்றன. முதலில் கூறிய உரை உணர்வு தொழிற்படும் போது அது பெரும்பாலும் உலகியல் பற்றியே நடைபெறுவதாகும். இதனை எடுத்துக்கூற முடியும்; ஆதலால், இந்த உணர்வு ஒரளவு உரையுள் அடங்குவதாயிற்று. உரையும், உணர்வும் இறந்த நிலையில் பெரும்பாலான மனிதர்களுக்குச் சாவு வந்துவிடும். ஆனால், அடிகளார்போன்ற மா ஞானிகளுக்கு உரையும், உணர்வும் இறந்த நிலையில் அந்த இடம் வெற்றிடம் ஆகாமல் ஒரு புதிய உரையிறந்த உணர்வு அங்கே முளைத்துவிடுகிறது. இதற்கு இரண்டே இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று, இதில் 'நான்' கலப்பு இல்லை, இரண்டாவது இறைவனைப்பற்றி அசைபோடத் த்ொடங்கி, சற்று நேரத்தில் இந்த உணர்வு தன்னை இழந்து, இறையனுபவத்தில் ஒன்றிவிடுகிறது. ஒன்றிவிட்ட நிலையில் இறையனுபவம் என்றோ, இந்த உணர்வு என்றோ பிரிக்கமுடியாது. அதைத்தான் அடிகளார் 'நின்று உணர்வதோர் உணர்வே' என்கிறார். தில்லைக்கு வந்தும் குருநாதர் தரிசனமோ, அடியார் கூட்டமோ கிட்டாத நிலையில் மிக வருந்திக் கோயில்