பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இது இல்லையென்று ஆகிவிட்ட பிறகு, குருநாதரையாவது ւնԱl1ւ-ւգ- தரிசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்; அதுவும் நடைபெற்ற பாடில்லை. இரண்டும் நடைபெறாத நிலையில் மனம் வருந்திய அடிகளார், திருப்பெருந்துறையையும் குருநாதரையும் மனத்துள் வரவழைத்துக்கொண்டு, அதே தியானமாக இருந்திருத்தல் வேண்டும். திருப்பெருந்துறையில் புறத்தே காட்சிதந்த குருநாதர் இப்பொழுது அகத்தே ஒளிவடிவாய்க் காட்சி தருகிறார். 'மகனே! உன் பார்வையைப் புறத்தே செலுத்தாமல், அகத்தே செலுத்துவாயாக திருப்பெருந்துறையில் மானுட வடிவுடன் உன் புறக்கண்களுக்குக் காட்சி தந்தேன். இப்பொழுது மானிட, குருநாதர் வடிவுகளுக்கு மூலமாகவுள்ள ஒளிவடிவத்தைக் காண்டாயாக’ என்று ஒளிக்காட்சி தந்திருக்க வேண்டும். அதனால்தான் பத்துப்பாடல்களில் எட்டுப்பாடல்கள் ஒளிக்காட்சியை வர்ணிக்கின்றன. . நான்கு பாடல்களில் புறத்தே காணப்படும் ஒளியாகவும் .நான்கு பாடல்களில் அகத்தே காணப்படும் ஒளியாகவும் இறைவன் உள்ளான் என்று பாடுகிறார். ஒளிவடிவாக உள்ள ஒரு பொருளை, ஒன்று புறக்கண்களால் காணவேண்டும், இன்றேல் அகக்கண்களால் காணவேண்டும். இத்தனை இடங்களில் ஒளி என்று பொதுவாகக் கூறினாரேனும் அந்த ஒளி இந்த இரண்டு முறைகளில் காணக்கூடியதாய் அமைந்திருத்தல் வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, உள்ளே தங்கிய அந்த ஒளி என்ன பணியைச் செய்கிறது என்ற வினாத் தோன்றும். ஒளிவடிவாகக் காட்சி தருவது ஒருபுறம், அதைவிட ஆழமாக உணர்விற்கு உணர்வாய் விரிந்து நிற்பது மற்றொருபுறம். 'உரை, உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே' (390) என்று கூறியது சிந்திப்பதற்குரியது. உணர்வு என்று கூறிவிட்டால் பசி,