பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 417 செய்தார். ஐந்தாவதாக, எதிரே இருந்த குருநாதர் தாம் யாரென்பதை உமையொருபாகன் கோலமாகக் காட்டினார். ஆறாவதாக, குருநாதர், சீடர்கள் ஆகிய அனைவரும் மறைந்து மணிவாசகர் தனியே விடப்பட்டார். ஏழாவதாக, மணிவாசகர் தம் உள்ளத்திற்குள் இதுவரை கண்டிராத பெரும் சோதியைக் காண்கிறார். இந்தசு சோதி அவருள் நிலைத்துவிட்டது. குருநாதர் சோதிவடிவாக உள்ளே நுழைந்து, நெஞ்சில் ஒளிவடிவாகத் தங்கிவிட்டதே திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் மறக்க முடியாத சம்பவமாகும். இந்தப் பதிகத்திற்கு முன்னுள்ள பல பாடல்களில் இறைவனைச் சோதி என்று விளித்துள்ளார் என்றாலும் இந்த இடம் தனிச்சிறப்புடையதாகும். இந்தப் பத்துப் பாடல்களில் "எழுபரஞ்சோதி” (388) என்றும், "மெய்ச்சுடரே (39) என்றும், து ஒளியே (39) என்றும், 'கொடுஞ்சுடர்க் குன்றே (392) என்றும், எழுகின்ற சோதியே (393) என்றும், எழுகின்ற ஞாயிறே. (394) என்றும், 'படர் ஒளிப் பரப்பே' (395) என்றும், ஆனந்தம் ஆக்கும் என்சோதி (395) என்றும், சோதியாய் தோன்றும் உருவமே' (39) என்றும் எட்டுப் பாடல்களின் ஒன்பது இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சிந்திப்பதற்குரியதாகும். இப்பதிகம் எங்கு அருளப்பெற்றது என்பது தெரிய வில்லை. இதற்கு முந்தைய பதிகம் தில்லையில் அருளப் பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். தில்லைக்கு வருக என்று ஆணை பிறந்தது திருப்பெருந்துறையில் எனவே, தில்லை வந்தவுடன் குருநாதர் தரிசனம் கிடைக்கும் என்றோ அல்லது திருப்பெருந்துறையில் உடனிருந்த அடியார் கூட்டத்தோடு மறுபடியும் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டுமென்றோ அடிகளார் நம்பியிருக்க வேண்டும். ஆனால், தில்லை வந்தும் அடியார் கூட்டத்தில் கலக்கும் வாய்ப்பு வரவில்லை.