பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்றாலும், இவற்றைவிடச் சிறப்புடையதும் ஒன்று உண்டு. அதுவே மனிதனுடைய மாற்றமாகும். மனிதனுடைய வாழ்க்கை முறையில்- நினைவில் எண்ணத்தில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. ஆனால், அந்த மாற்றங்கள் பழைய நிலைக்கு நேர்மாறாக 180 பாகைக் கோணத்தில் செல்வதில்லை. சிறுசிறு பாற்றங்கள் நிகழலாம். ஆனால், சில நாட்களில் இந்த மாற்றங்கள் வன்மை இழந்து பழைய நிலைக்கே போய்விடுதலைக் கண்டுள்ளோம். இவ்வாறில்லாமல் முழு மாற்றத்தைப் பெற்று, அந்த மாற்றம் நிலையாக நிற்கவேண்டுமானால், அந்த மாற்றத்தை அந்த மனிதன் தானே செய்துகொள்ள முடியாது. நிலையான இம்மாற்றத்தைச் செய்யக்கூடியவன் இறைவன் ஒருவனே ஆவான். நரி பரியாதல், பரி நரியாதல், கூலியாளாய் வருதல் முதலிய மாற்றங்கள் அற்புத நிகழ்ச்சிகள் என்று சொல்லப்படினும் ஒரு சில நேரம் அற்புதம் காட்டி, மறுபடி பழைய நிலையை அடைந்து விடுகின்றன. இந்த Lorpplb girporača, ultipth (temporary change) stairs) சொல்லப்பெறும். ஆனால், ஒர் அமைச்சரை அடியாராக்கி இருபத்து நான்கு மணிநேரமும் அதேநிலையில் இருக்கச்செய்து, அவர் மூலம் திருவாசகம் வெளிவர ஏற்பாடுகள் செய்யப் பெற்றதென்றால், திருவாதவூரர் பெற்ற மாற்றம் தாற்காலிக மானது அன்று; நிலையானது என்பது வெளிப்படை. இந்த நிலைபேறான மாற்றத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் குருநாதர் வடிவுடன் ஒருவர் தோற்றமளித்தார். இரண்டாவதாக அமைச்சர் தம்மை மறந்து குருநாதரின் பாதங்களில் சென்று வீழ்ந்தார். மூன்றாவதாக, குருநாதர் திருவடி தீட்சை செய்தார். நான்காவதாக, அடியார் கூட்டத்தினிடையே அமருமாறு