பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. செத்திலாப் பத்து (சிவானந்தம் அளவறுக் கொணாமை) திருவாசகத்தில் இதுவரை வந்துள்ள பதிகத் தலைப்புகள் பெரும்பாலும் அப்பகுதியில் வரும் சொற்களைக் கொண்டே ஆக்கப்பெற்றனவாம். - இந்த அடிப்படையை மனத்தில்கொண்டு பார்த்தால், செத்திலாப் பத்து என்ற தலைப்பு எவ்வாறு வந்தது என்று அறிந்துகொள்ள முடியவில்லை, பத்துப் பாடல்களில் முதல் பாடலில்தான் "செத்திலேன்' என்று வருகிறது. இரண்டாவது பாடலில் செற்றிலேன்' என்று வருகிறது. ஆனால், இதன் பொருள் வேறு. மூன்றாவது பாடலில் "செத்திடப் பணியாய் என்று வருகிறது. எஞ்சியுள்ள பாடல்களில் பதிகத்தலைப்பு வருமாறில்லை. ஐந்தாம், ஆறாம் பாடல்களில் செத்திலேன் என்ற சொல் பயன்படுத்தப்படாவிட்டாலும் சாவு பற்றிய குறிப்பு வருகின்றது. எஞ்சியுள்ள ஐந்து பாடல்களில் இப்பிரச்சினை இடம்பெறவேயில்லை. எனவே, இத்தலைப்பு எவ்வளவு பொருத்தம் என்பது சிந்தனைக்குரியது. இதைப்போலவே இப்பதிகத்தின் நுண்மையான உட்கருத்து இது என்று விளக்குவதாக நினைத்துக் கொண்டு, சிவானந்தம் அள்வறுக்கொண்ாமை என்று உட்தலைப்பு இட்டுள்ளனர். இதுவரை கண்ட பல உட்தலைப்புக்கள் போல இதுவும் பதிகத்தோடு எவ்விதத் தொடர்புமின்றித் தொங்குகிறது.