பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நான் சாகாமல் இருந்துவிட்டேன் என்று முதல் பாடலில் கூறுகின்றார். இறைவனை நோக்கிச் செத்திடப் பணியாய் என்று வேண்டுகிறார் என்றால், இதில் ஏதோ ஒரு புதுமை இருப்பதாக நினைக்கவேண்டியுள்ளது. திருப்பெருந்துறையில் அடியார்களோடு தாம் உடன் போகாமல் தங்கிவிட்டதற்கு ஒரு காரணம் இந்தப் பருவுடம்பே என முன்னரும் பாடியுள்ளார் அடிகளார், நாளாவட்டத்தில் பருவுடலை வெறுக்கும் எண்ணத்தைக் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டார் என்றே நினையவேண்டியுள்ளது. இப்பருவுடலுக்குரிய கருவி, கரணங்களை வைத்துக் கொண்டே இறையனுபவத்தில் நுழையலாம், அதில் மூழ்கலாம் என்பதை அனுபவத்தால் அறிந்துகொண்டவர் அடிகளார். அதனாலேயே இதுவரை வந்துள்ள பாடல்களில் சாகவேண்டும் என்ற குறிப்பு அதிகம் இடம்பெறவில்லை. ஆனால், இப்பதிகத்தில் சாவுபற்றிய நினைவு நான்கு இடங்களில் ஏன் வந்தது? பெருந்துறையில் அமர்ந்திருந்த அடியார்கள், குருநாதருடனேயே போய்விடுவதற்கு எது உதவியாக இருந்தது என்ற சிந்தனையில் ஈடுபடுகிறார் அடிகளார். அவர்களுக்கிருந்த தனித்தகுதி தம்பால் ஒரு சிறிதும் இல்லையே என்று நினைக்கிறார். இவ்வாறு இருந்தும் குருநாதர் திருவடி தீட்சை செய்தார். ஆதலால், குருநாதரோடு மறைந்த அந்த அடிகளார்களுக்குள்ள தகுதிகளில் எது தம்பாலில்லை என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட அடிகளார், ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். பொறி, ఖr53ణTG கூடிய இந்தப் பருவுடலே அந்த அடியார்களோடு சேர்ந்து செல்ல முடியாமல்போனதற்குக் காரணம் என்று நினைத்தார்.