பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழாப் பத்து 97 இப்பாடலில் மெள்ள மெள்ள இறைவனுடைய பொறுப்பு அதிகமாகிறது என்பதை அவனுக்கே எடுத்துக் காட்டத் தொடங்குகிறார். முன்னர், பற்றுநான் மற்றிலேன்' என்றுதான் கூறினாரே யொழிய அந்த மற்று' என்ற வினைமாற்றிற்கு அடிப்படையாக உள்ளது எது என்பதைத் தெரிவிக்கவில்லை. அதாவது, வேறு பற்று எனக்கு இல்லையென்றால், ஏதோ ஒன்று ஏற்கெனவே இருக்கின்றது என்பதைக் குறிக்கின்றது அல்லவா? அது, எது என்பதை அடிகளார் விளக்கமாகச் சொல்லவில்லை. இதன் மூலம் இறைவன் தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? வேறு பற்றுக்களில் மனம் செல்லவில்லை என்றால், அடிப் படையிலுள்ள பற்று எது என்ற வினாவிற்கு விளக்கமாக விடை கூறும் முறையில் பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்' என்று விளக்கமாகப் பாடியுள்ளார். அவன் பாதத்தில்தான் தம் பற்று இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டார் அடிகளார். அந்தப் பற்று அவன் திருவடிகளை நோக்கித் தானாகச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக அவனே குருநாதராக வந்து அடிகளாருடைய பற்றை, தன் திருவடிகளின் பக்கம் திருப்பிவிட்டான் என்ற கருத்தை, தேடி நீ ஆண்டாய்” என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். இதனால் இறைவனுடைய பொறுப்பு இரண்டு மடங்கு அதிகமாவதைச் சுட்டுகிறார். 'இப்பொழுது நான் கோபித்துக்கொள்கிறேன் (ஊடுவது) என்றால், அது உன்னிடம்தானே செய்யமுடியும்! அவ்வாறு கோபிக்காமல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன் (உவப்பதும்) என்றால், அதுவும் உன்னைத்தானே செய்யமுடியும்!” - ஊடுவதும், உவப்பதும் யாரிட்ம் நடைபெறுகின்றன? கற்புடைய பெண்ணுக்கு ஊடுதல், உவத்தல் என்ற இரண்டும் தன் தலைவனிடமே நடைபெறுகின்ற