பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 செயல்கள் ஆகும். இந்தச் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், தான் தலைவியாக இருத்தலையும், அவன் தலைவனாக இருத்தலையும் அவனுக்கே எடுத்துக் கூறியுள்ளார் அடிகளார். இந்த உறவுமுறை நிலைபெற்ற பின்னர், தலைவி மனத்தில் உறுதி பிறக்குமாறு செய்யவேண்டியது தலைவன் கடமையல்லவா? அதனையே 'எனக்கு உறுதி உணர்த்துவது உனக்கு உரிய கடமையாகும்) என்கிறார். “அதனை நீ செய்யாததால் எல்லையற்ற வாட்டத்துக்கு உள்ளாயினேன்; ஆதலால் உலகிடை வாழ விருப்பமில்லை’ என்கிறார். 451. வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே எல்லை மூ உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 4 பாடலின் இறுதி அடியில் மூவுலகும் ஆதி ஈறு இல்லாமல் வல்லையாய் வளர்ந்தாய் என்று அவனை விளித்துவிட்டு வாழ்கிலேன் கண்டாய் வந்து அருள்புரிக என்று கூறுவதால் இவை இரண்டு கருத்துக்களும் தொடர்பின்றித் தனித்து நிற்பது போல் தோன்றுகின்றன. ஆழ்ந்து நோக்கினால் இவற்றிடையே உள்ள தொடர்பை ஒரளவு புரிந்துகொள்ள முடியும். அரக்கர் புரம் எரித்தவனும் ஆதி ஈறு இல்லாமல் வளர்ந்தவனுமாகிய ஒருவனுக்கு இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் மணிவாசகர் என்ற ஒரு தனி மனிதர் படும் துயரத்தைக் கண்டுகொள்ளவோ போக்கவோ நேரம் எங்கே இருக்கப்