பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழாப் பத்து 99 போகின்றது? அவன் கண்டுகொள்ளப்போவதுமில்லை; துயரைப் போக்கப் போவதுமில்லை என்ற நினைவு தோன்றியவுடன் எத்தனை நாள் வாழ்ந்தாலும் இவை இரண்டும் நடைபெறாவோ என்று அவநம்பிக்கை மேலோங்கியதால் வாழ்கிலேன் கண்டாய் என்றார். நம்பிக்கை தளர்ந்தவராயின் வாழ்கிலேன் என்பதோடு அல்லவா நிறுத்தியிருக்கவேண்டும்? 'வருக என்று அருள்புரியாயே’ என்பதன் நோக்கம் என்ன? அதுவே மனித மனத்தின் இயல்புக்கு ஒர் எடுத்துக்காட்டு. எவ்வளவு நம்பிக்கை இழந்த போதிலும் மனித மனத்தின் ஆழத்தில் ஒரு துளி நம்பிக்கை இருந்தே தீரும். அந்தத் துளி நம்பிக்கையின் வெளிப்பாடுதான் 'வருக என்று அருள்புரியாய்’ என்ற விண்ணப்பம். 452. பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்கனே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 5 இப்பாடலில் தம் பொறி புலன்கள் தம்முடைய ஆணைக்கு அடங்கி நடவாமல் தம் விருப்பம்போல் திரிகின்றதைச் சுட்டிக்காட்டி, 'இவற்றை அடக்கும் வாய்ப்பே இல்லை, எனவே இங்கு வாழ்கிலேன் கண்டாய்' என்கிறார். 'சிவபுரத்து அரசே! நீ என்னை ஆட்கொண்டது கனவிலோ கற்பனையிலோ அன்று. இவ்வுலகிடை என் கையால் உன் திருவடிகளைப் பற்றிக்கொள்ளுமளவிற்கு