பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழாப் பத்து 101 கருணையே நோக்கிக் கசிந்து உளம் உருகிக் கலந்து நான் வாழும் ஆறு அறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 7 ‘சூரிய மண்டலத்தின் நடுவே சதாசிவ சொரூபியாய் இருக்கின்றவனே! நீ திருப்பெருந்துறையில் அன்று அருளிய கருணையைச் சதா சர்வகாலமும் நினைந்து எஞ்சியுள்ள இந்த வாழ்நாளைச் செலவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத மருட்சியை உடையவனாகிய நான்(மருளனேன்) வாழவிரும்பவில்லை என்றவாறு. 'உன் கருணையை ஓயாது நினைந்துகொண்டிருந்தால் வாழ்வதில் தவறில்லை; வாழ்வும் பயனுடையதாகும். 'ஆனால், கருணையை மறந்துவிட்ட மருட்சி மனத்திடை நிரம்பிவிட்டது. அது போமாறில்லை. இந்த நிலையில், நான் மேலும் வாழவிரும்பவில்லை என்கிறார். 455. பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே அந்தம் இல் அமுதே அரும்பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 8 ‘அடியேன் உய்யும்படியாக நீயே வந்து ஆண்டாய், இப்பொழுது அத்தொடர்பு இன்மையின் நான வாழவிரும்பவில்லை என்றவாறு.