பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 456. பாவ நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் தேவர்தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே மூ உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே 9 பாவநாசா-அடியவர் பாவத்தை நாசம் செய்பவனே. முழங்கு அழல்-ஒலியோடு எரியும் நெருப்பு இப்பாடலின் பொருள் வெளிப்படை 457. பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஒர் துணை என நினைவனோ சொல்லாய் மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 10 'பழுது இல் தொல் புகழாள்' என்றது, உயிர்கள்மாட்டுத் தாயாகிய அவள் செலுத்தும் கருணை, தேன் ஒழுக்குப்போல் இடைவிடாது வருதலைக் குறித்து நின்றது. அது என்றும் தடைப்படுவது இல்லை. ஆதலால் அடியார்கள் அவளைக் குறைகூறுகின்ற பழுது என்றுமே இல்லை என்றபடி,