பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அருட் பத்து (மகாமாயா சுத்தி) இதில் வரும் பத்துப் பாடல்களும் அருளாயே என்று முடிவதால், அருட்பத்து என்று பெயர்வந்ததுபோலும், முன்னருள்ள பல பகுதிகளைப்போல இதுவும் பாடலின் ஈற்றடியில் வரும் சொல்லைக் கொண்டு பெயர் பெற்றுள்ளது. நான் உன் அடைக்கலம் என்றும், ஆசைப்பட்டேன் என்றும், நீ ஆட்கொண்ட அதிசயத்தை நினைந்து பார்க்கின்றேன் என்றும், என்றைக்கு உன் திருவடியைப் புல்லிப் புணர முடியும் என்றும் பேசிவந்தார் அடிகளார். அடுத்து இந்த நிலைமை நீடிக்குமானால் இந்த உலகில் வாழவிரும்பவில்லை எனவே வருக என்று அருள்புரிவாயாக என்ற முறையில் பாடினார். தம் மனத்தாங்கலையும், துயரத்தையும் பல்வேறு விதங்களில் வெளியிடும் முறையில் முன்னர்க் கண்ட பாடல்களை அமைத்துள்ளார். ஆனால், அவர் விரும்பிய எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எனவே, எல்லையற்ற மனநோவுடன், "ஐயா! நான் மேலே கேட்ட எதையும் நீ தாராமல் போனாலும் சரி, உன் திருவடிக்கண் வருக என்று நீ அழையாவிட்டாலும் ੀ, இப்பொழுது மிகச் சாதாரணமான ஒரு வேண்டுகோளை உன்பால் வைக்கின்றேன். உன்னை ஆதரித்து அழைப்பேனேயானால் அது என்ன, (அதெந்துவே) ஏன் அழைத்தாய், என்றாவது