பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கேட்கக்கூடாதா?’ என்ற பொருளில் பத்துப் பாடல்களைப் பாடுகின்றார். முன்னருள்ள ஆறு பத்துக்களையும் இதனையும் பின்வருமாறு மாற்றி அமைத்துப் பார்த்தால் ஒர் அற்புதத்தைக் காணமுடியும். உலகியல் வாழ்வில் எங்கோ சென்றுகொண்டிருந்த தம்மை, அடியரில் கூட்டிய அதிசயத்தை முதலில் கூறினார். அந்த அதிசயத்தில் ஈடுபட்டு இவ்வுடம்பை நீத்து அடியருடன் சென்றிருக்க வேண்டும் என்ற கருத்தைச் செத்திலாப் பத்தில் கூறினார். அது இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்கின்றவரையும், பின்னரும் நான் உன் அடைக்கலம் என்னை ஏற்றுக்கொள்' என்றார். இம்மூன்றின் நிறைவாகப் ப்ொல்லா மணியைப் புணர்வது என்றுகொல்லோ’ என்று பாடினார். அதுவும் நடைபெறாமல் போகவே உள்ளார்ந்த தமது ஆசையை, ஆசைப்பத்தில் வெளியிட்டார். இந்த ஆசைகூட நிறைவேறாதபோது, இவ்வுலகிடை வாழப்பிடிக்கவில்லை வருக என்று அருள்புரிவாய் என்று வாழாப் பத்தில் கூறினார். அடுத்துள்ள பகுதியில் இவை ஒன்றையும் செய்யாவிட்டாலும், உன்னை நான் ஆதரித்து அழைத்தால் அது என்ன?’ என்றாவது அருளோடு கேட்கக்கூடாதா? என்கின்றார். இப்பொழுது இவற்றை வரிசைப்படுத்திக் காணலாம். 1. அதிசயப் பத்து(26, 2. செத்திலாப் பத்து,(23) 3. அடைக்கலப் பத்து(24, 4. புணர்ச்சிப் பத்து (27, 5ஆசைப் பத்து (25, 6 வாழாப் பத்து (28, 7 அருட் பத்து (29) என்ற ஏழு பத்துக்களின் பெயர்களையும் அமைதியாகப் படித்துப் பார்த்தால், மிகப் பெரிய வேண்டுதலில் இருந்து மிகச் சிறிய வேண்டுதலுக்கு இறங்கிவருவதைக் காணலாம். இதனை இறங்கு முறை (descending order) என்று திறனாய்வாளர் கூறுவர். அதாவது,