பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் பத்து 105 பெரிதாக ஒன்றைக் கேட்டுவிட்டு அதில்லாவிட்டால் இது; அதுவும் இல்லாவிட்டால் இது என்று கொஞ்சம் கொஞ்சமாக வேண்டப்பட்ட பொருளின் தரத்தைக் குறைத்துக் கொண்டு வருதல், இலக்கியங்களில் காணப்படும் ஓர் உத்தியாகும். - துரியோதனனிடம் கண்ணனைத் தூது அனுப்பும் தருமன், 'நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு; நாடு ஒன்று நல்கானாயின், ஐந்து ஊர் வேண்டு; அவை மறுத்தால் ஐந்து இல்லம் வேண்டு; அவை மறுத்தால் அடுபோர் வேண்டு’ என்று கூறியனுப்புவது இறங்கு முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். (வில்லி, கிருஷ்ணன் தூது: 9) நாயன்மார்களில் கண்ணப்பர் தவிர ஏனைய அனைவர்க்கும் முன்னவராகிய காரைக்காலம்மையார், தம்முடைய அற்புதத் திருவந்தாதியில் பின்வருமாறு பாடுகின்றார். 'இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும், படரும் நெறி - பணியாரேனும்’ திருமுறை: 11:42) என்று பாடுவதும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். நாடு கேட்கத் தொடங்கி, ஐந்து வீடாவது வேண்டு என்று இறங்குகின்றான் தருமராசன். என்னுடைய துன்பத்தைப் போக்காவிடினும், இந்த வழியாகப் போ என்று ஒரு வழியைக்கூடச் சொல்லக்கூடாதா என்று இறங்குகிறார் அம்மையார், அதேபோன்று அடிகளாரும் அதிசயத்தில் தொடங்கி நான் ஆதரித்து அழைத்தால் அது என்ன என்று ஒரு வார்த்தையாவது கேட்கக்கூடாதா என்ற முறையில் இறங்குவதைக் காணலாம். - 5.4.3.IV 8