பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்த ஏழு பத்துக்களையும் ஒன்றாக வைத்துப் படித்துப்பார்த்தால், இவை முன்பின்னாக அமைக்கப் பட்டிருப்பினும், நாம் மேலே கூறிய முறையில் அமைந்தால் ஏற்படும் சிறப்பை அறியலாம். வழக்கம்போல் ஏதோ சில சாத்திரச் சொற்களை இதனுட் புகுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் பழையவர்கள் 'மகாமாயா சுத்தி என்ற உட்தலைப்பைத்' தந்துள்ளனர். 458. சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே கரி குழல் பணை முலை மடந்தை பாதியே பரனே பால் கொள் வெள் நீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே f நீதியே மெய்ப்பொருள் வடிவானவனே. ஆதரித்து-விரும்பி. இப்பாடலின் முதலடி முன்னுரையில் கூறிய இறங்கு முறையில் அமைந்திருத்தலைக் காணலாம். சோதி என்பது, பற்றுக்கோடு இல்லாததாய், உருவோ வடிவோ எதுவும் இல்லாததாய், எங்கும் நிறைந்ததாய் இருக்கின்ற பேரொளியாகும். அடுத்துள்ளது சுடர்' என்பதாகும். சுடர் என்று கூறும்போது, ஏதோ ஒன்றைப் பற்றி நின்று எரியும் தீப்பிழம்பு நினைவுக்கு வருகிறது. சூழ் ஒளி விளக்கு' என்று கூறும்போது, சுடரைவிடச் சிறியதாய், சிறியதொரு திரியைப் பற்றுக்கோடாகக் கொண்டு, ஒர் அழகிய விளக்கினுள் அமர்ந்து எரியும் சிறு ஒளிப்பிழம்பு நினைவுக்கு வருகிறது.