பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் பத்து 107 இவ்வாறு மூன்று ஒளியைப்பற்றிக் கூறவேண்டிய தேவை என்ன? அதுவும் ஒன்றைவிட ஒன்று குறைந்து நிற்கும் இயல்புடையதாய் அமைந்துள்ள காரணம் என்ன? நாம, ரூபம் அற்றதும், பிரபஞ்ச காரணமாய் இருப்பதுமான ஒரு பொருளை எவ்வாறு குறிப்பது? எவ்வித அடைமொழியும் இல்லாமல் சோதியே என்று கூறுவதால் இக்கருத்தைப் பெறவைத்துவிடுகிறார். அடுத்து நிற்பது சுடரே" என்பதாகும். சோதி என்று சொல்லும் போது எவ்விதப் பற்றுக்கோடுமின்றித் தனித்து விளங்கும் ஒருபொருளைக் கூறியவர், சுடர் என்று சொல்லும்போது ஒரு பற்றுக்கோட்டை அண்டி நிற்கும் ஒளிப்பிழம்பைக் குறிக்கின்றார். சக்தியோடு சேர்ந்துள்ள சிவம், சுடருக்கு உதாரணமாய் அமைகின்றது. மூன்றாவதாக உள்ளது பருவடிவினை உடைய விளக்காகும். மேலே கூறிய இரண்டிற்கும் பருவடிவில்லை. சுடரொளிக்குத் திரி பருவடிவுடன் உள்ளதே என்று கேட்கலாம். ஆனால், பற்றி எரியும் திரியில் ஒளியைக் காணும்போது, திரியைப்பற்றிய நினைவு தோன்றுவதில்லை. அப்படியே திரியைப்பற்றி நினைத்தாலும் அது தனித்து இயங்காமல் சுடரினுள் அடங்கிவிடுதலைக் காணமுடியும். எனவேதான், பருவடிவு இல்லை என்று கூறினோம். - சூழ் ஒளி விளக்கு என்பது இலிங்கத் திருமேனியைக் குறிப்பதாகும். சிறிய கைவிளக்கில் தோன்றும் ஒளி, விளக்கை விளக்கிக் காட்டுகிறதே தவிர, தான் பற்றி எரியும் நிலையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதில்லை, ஆழ்ந்து பார்ப்பவர்களுக்கே திரியைப் பற்றி எரியும் சுடர் கண்ணுக்குத் தெரியும். அதேபோல இலிங்கத் திருமேனியைக் காணும்போது, அதனுள் இருக்கும் சோதி