பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தெரிவதில்லை. உள்ளிருக்கும் சோதியைக் öᏚfTöᏈᏈᎢ வல்லாருக்கு இலிங்கத் திருமேனி மறைந்துவிடுகிறது. வேறொரு வகையாக இதனைக் கூறலாம். இலிங்கத் திருமேனியைப் பார்ப்பவர்கள் சோதியைக் காண்பதில்லை; சோதியைக் காண்பவர்கள் திருமேனியைக் காண்பதில்லை. இதனையே திருமூலர், மரத்தை மறைத்தது மாமத யானை மரத்துள் மறைந்தது மாமத யானை (திருமந்திரம் 2264) என்று பாடுகிறார். இதனை இலிங்கத்துள் மறைந்தது சோதி, சோதியுள் மறைந்தது இலிங்கம் என்று கூறலாம். இப்பாடலின் முதலடி இறங்கு முறையில் அமைந் துள்ளது என்று கூறினோம் அல்லவா? அதனை நிரூபணம் செய்யும் முறையில் பாடலின் கடைசிப் பகுதி அமைந்துள் ளதைக் காணலாம். பரஞ்சோதியாய் உள்ள பொருள் தன் நிலையினின்று பல படிகள் இறங்கி, ஒரு மானிட வடிவ மெடுத்துக் குருந்தமரத்தடியில் குருநாதராக அமர்ந்துள்ளது இறங்குமுறைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். - தன் கருணை காரணமாக, பரஞ்சோதி பல படிகள் இறங்கிவந்தாலும், அடிகளார். அதனைக் கண்டு ஏமாந்து விடவில்லை. நிறைமலர்க் குருந்த மரத்தின் நீழலில் அமர்ந்திருக்கும் மானிடவடிவை இனங்கண்டுகொள்கிறார். நாம, ரூபமற்ற மூலப்பொருளாகிய அந்தப் பரஞ்சோதிதான் இது என்பதை உடனே அறிந்து கொண்டார் ஆதலின், 'நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே என்று அழைக்கின்றார். 'அதெந்துவே என்றருளாயே என்பது அது என்ன என்று அருளோடு ஒருவார்த்தை கேட்கமாட்டாயா? என்னும் பொருளை உடையது.