பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தாமாகவே காட்சி தந்த அவ்வடிவுகள், இவர் ஒலமிட்டு அலறும்போது காட்சி தர மறுத்துவிட்டன. அதனையே இப்பாடல் அறிவிக்கின்றது. 460. எங்கள் நாயகனே என் உயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே தக்க நல் காமன் தனது உடல் தழல் எழ விழித்த செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அம் கண அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே 3 இப்பாடலில் ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே' என்று கூறியதன்பின்னர்க், காமன் தனது உடல் தழல் எழ விழித்த செம் கண் நாயகனே' என்று கூறியது சிந்தனைக்குரியது. - இருவரை மனைவியராகக் கொண்டும் காமனை எரித்தான் என்றால், இந்தக் கணவன் மனைவி உறவு, நாம் நினைப்பதுபோன்ற உலகியல் உறவன்று என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 461. கமல நான்முகனும் கார் முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கு அரிய விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே 4