பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 398. பொய்யனேன் அகம் நெகப் புகுந்து அமுது ஊறும் புது மலர்க் கழல் இணை அடி பிரிந்தும் கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ 参见 விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணாச் செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே t 'பொய்யனாகிய என்னுள்ளத்திலும் புகுந்து அதனை நீ உருக்கியதை விழித்துக்கொண்டிருந்து பார்த்துத் தெரிந்தேன். அப்படியிருந்தும் நீ என்னைவிட்டுப் போய்விட்ட கொடுமையைப் பார்த்தவுடன் செத்திருக்க வேண்டும். அப்படிச் சாகவில்லை. விழித்துக்கொண்டே இருந்தும் உன்னைக் கோட்டைவிட்டவனாகிய நான், இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றேன்' என்றவாறு. 399, புற்றும் ஆய் மரம் ஆய்ப் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் மற்று யாரும் நின் மலர். அடி கானா - மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்துப் பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்தன்னைச் செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே 2 நீண்டகாலத் தவத்தில் ஈடுபடுதலின் புற்றாகவும், மரமாகவும் நிற்கின்றவர்கள் தண்ணிரையும் காற்றையுமே உணவாகக் கொள்கின்றவர்கள் ஆகிய யாருமே காணாத் திருவடியை உடையவனே! ஒரு வார்த்தையுள் என்னை ஆட்கொண்டு அடிமையாக்கினாய். அதன்பிறகு அடிமை