பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து • 5 யாகிவிட்ட நான் ஆட்கொண்டதை நினைந்து உடல் பதறிக் கண்ணிர்விட்டுக் கதறியிருக்க வேண்டும். இவை ஒன்றும் செய்யாத இந்த உடலை அழித்திருக்க வேண்டும். அதுதானும் செய்யவில்லை”என்கிறார். இப்பாடலில் வரும் செற்று’ என்ற சொல்லை முதல் பாடலில் வரும் 'செத்து' என்ற சொல்லைப்போலக் கருத வேண்டா. செற்று என்ற சொல் புற்று' என்று முதலடியில் வரும் சொல்லுக்கு எதுகை என்றும் கொள்ள வேண்டா. இங்கு அடிகளார் இந்த உடலை நான் அழிக்கவில்லை என்ற கருத்திலேயே செற்றிலேன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். முதல் பாடலில் வரும் 'செத்திலேன்' என்ற சொல் இயல்பாக நிகழும் சாவைக் குறிப்பதாகும். இயல்பாக நடைபெறவேண்டிய அது நடைபெறாதவழி முன்னின்று உடலை அழித்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை என்று வருந்துகிறார். - - 400. புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள் புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப் பாகா சங்கரா எண் இல் வானவர்க்கு எல்லாம் நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த சிலையனே எனைச் செத்திடப் பணியாய் . திருப்பெருந்துறை மேவிய சிவனே 3 இப்பாடலின் முதலிரண்டு அடிகள், சராசரி மனிதர் கட்குச் சிறிய அளவில் நடைபெறுகின்ற மனமாற்றத்தைப் பெரிதுபடுத்திக் கூறியதாகும். எதிர்பாராத நிலையில் பணமோ பதவியோ கிடைத்துவிட்டால் சாதாரண