பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மனிதர்கள் தலைகால் தெரியாமல் நடந்துகொள்வை இன்றும் உலகிடைக் காண்கிறோம். . அடிகளாரைப் பொறுத்தவரை உலகியல் முறையில் குடிப்பிறப்பு, கல்வி, பெரும்பதவி ஆகியவை இயல்பாக அமைந்திருந்தன. ஒருவேளை அரசனே இவரை அழைத்து, ‘இன்றுமுதல் இப்பாண்டி நாட்டின் மன்னனாக நீ இருப்பாயாக' என்று கூறியிருந்தால், தம்முடைய வளர்ச்சியில் இது இயல்பாக நிகழவேண்டிய ஒன்றாகும் என்று அடிகளார் அமைதியுற்றிருப்பார் வளர்ச்சியில் இது இயல்பு என்று நினைத்தவுடன் தருக்கித் திரிவதற்கு அங்கு ஒன்றுமில்லை. ஆனால், ஆன்மீக வழியில் திருவாதவூரர் சென்றது மில்லை; செல்ல விரும்பியதுமில்லை. அப்படியிருக்க வழி யோடு சென்ற அவருக்கு, குருந்த மரத்து அடியிலிருந்த குருநாதர் எத்துணைப் பெரிய நன்மையைச் செய்தார். இது இயல்பாக வந்த வளர்ச்சியன்று. எனவேதான் அடிகளார், ‘புலையனேனை' என்று தொடங்குகிறார். புலையன் என்ற சொல் தாழ்ந்தவன் என்ற பொருளைத் தருவதாகும். ஆன்மீ கத்துறை தவிர வேறு எல்லாத் துறைகளிலும் உயர்ந்து நின்றவர் திருவாதவூரர். ஆதலால் ‘புலையனேனை என்ற சொல்லுக்கு ஆன்மிகத் துறையில் மட்டும் எவ்வித ஈடு பாடும் இல்லாமல் கீழ்மகனாக நின்ற தமக்கு என்று தொடங்குகிறார். - கீழ்மகனென்று அறிந்திருந்தும் அதுபற்றிக் கவலை யுறாமல் மேன்மக்களிலும் மேன்மக்கள் பெறவேண்டிய பதத்தை ஒரு விநாடியில் நல்கிவிட்டான் பெருந்துறையான். தம் தகுதிக்கு ஒரு சிறிதும் பொருத்தமில்லாத இந்தப் பதவி கிடைத்தவுடன், எல்லையற்ற களிப்புக் கொண்டு தலைகீழாக நடந்ததாகக் கூறுகிறார் அடிகளார்.