பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 7 திருவாதவூரர் இப்பொழுது மணிவாசகராக மாறிவிட்டார். ஆணவமோ, தருக்கோ இனித் தலைகாட்டப் போவதில்லை. ஆனால், இந்த உடம்பு என்ற ஒன்று இருக்கின்றவரையில் அதற்குரிய சேட்டைகள் இருந்தே தீரும். அந்த அச்சம் அடிகளாருக்கும் ஒரு சிறிது இருந்ததுபோலும். எனவே, இப்பாடலின் இறுதியில் 'எ(ன்)னைச் செத்திடப் பணியாய் என்று பாடுகிறார். 401. அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் என்பர் ஆய் நினைவார் எனைப் பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் வன் பராய் முருடு ஒக்கும். என் சிந்தை மரக் கண் என் செவி இரும்பினும் வலிது தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே 4 இந்தப் பாடலில் தம் குருநாதரிடம் ஒரு வினாவை எழுப்புகிறார். அடிகளார். அருந்தவம் முயல்வோர், அயன், மால் ஆகிய அனைவரும் ஒருபுறம் நிற்க, அவர்களை எல்லாம் விட்டுவிட்டுத் தம்மை வந்து ஆட்கொண்டமையை நினைக்கின்றார். அப்பொழுதுதான் இந்த வினா அடிகளார் மனத்தில் தோன்றுகிறது. பலரும் அறியக் குருநாதர் ஆண்டார் என்பது உண்மைதான். அவ்வாறு ஆட்கொண்டதால் ஏற்பட்ட பலன் என்ன? தம்முடைய மனம், நேராக வளராமல் முண்டு முடிச்சுக்களோடு கூடி வளர்ந்துள்ள பராமரம் என்றும், தம்முடைய கண்கள் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளினால் ஆகியவை என்றும், தம்முடைய செவிகள் இரும்பினும் வலியவை என்றும் கூறுகிறார்.