பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தம்மை ஆண்டதன் பின்னரும் தம்முடைய மனமும் கண்ணும் செவியும் மேலே சொன்னபடி இருக்கின்றன என்றால், ஆண்டுகொண்டான் என்பதற்கு என்ன அடையாளம்? எதற்காக ஆண்டுகொண்டான் என்ற வினாவோடு முடிக்கின்றார். 402. ஆட்டுத் தேவர்தம் விதி ஒழித்து அன்பால் . ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடு அரும் பொருளே நாதனே உனைப் பிரிவு உறா அருளைக் காட்டி, தேவ நின் கழல் இணை காட்டிக் காய மாயத்தைக் கழித்து அருள்செய்யாய் சேட்டைத் தேவர் தம் தேவர் பிரான் . . திருப்பெருந்துறை மேவிய சிவனே 5 வேத காலம் தொடங்கி எட்டாம் நூற்றாண்டுவரை. ஏன், அதற்குப் பின்னரும் சில நூற்றாண்டுகள்வரையில். வேத வழக்கொடு பட்ட உயிர்ப்பலி யாகம் இந்நாட்டின் பல இடங்களில் பரவியிருந்தது. உயிர்ப்ப்லி யாகம் செய்வதன் மூலமே தேவர் உலகத்தையும் தேவர் பதவிகளையும் அடைந்து அனுபவிக்கலாம் என்று இங்குள்ளவர் பலரும் எண்ணினர். அதனைச் செய்யும் தகுதியுடைய வைதிகர்கள் பலர், இந்தப் பூவுலகத்தில் வாழும் தேவர்கள் பூச்சுரர்) என்று தம்மை எண்ணிக் கொண்டும் சொல்லிக்கொண்டும். தருக்கித் திரியலாயினர். இவர்கள் அனைவரையும் ஒருசேர ஒதுக்குகின்றார் அடிகளார். பலியிடப்படும் யாகத்தில், சில சடங்குகளை நிறைவேற்றுவதன் மூலம், தேவர் உலகத்தை அடையலாம் என்று பலரும் எண்ணிக்கொண்டிருந்தாலும், அதன் சிறுமையை எண்ணி, அதனை ஒதுக்கிவிட்டு, அன்பு நிறைந்த உள்ளத்தோடு உன் அருள்வழியே என் வாழ்வை நடத்த முற்பட்டேன்' என்கிறார். -