பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 9 'உன் அருள்வழி நிற்பேன்’ என்று பாடிய அடிகளார், பின் இரண்டு அடிகளில் அதற்கு விளக்கம் தருகிறார். திருப்பெருந்துறையில் குருநாதர் கழல்இணை காட்டியது, அருள்வழி நிற்க உதவியது உண்மைதான். திருவடிக் காட்சி, திருவடி சம்பந்தம் இரண்டும் கிடைத்த பிறகு மீட்டும் இவ்வுலகிடை என்ன வேலை? . . சாதாரண யாகம் செய்பவர்கள்கூட, அது முடிந்த பின்னரும் இவ்வுடம்பை நீத்தபின்னரே தேவர் உலகை அடைகின்றார்கள். கிடைத்தற்கரிய திருவடிப் பேறு கிடைத்தபின் தாமும் அத்திருவடியுடனேயே சென்றிருக்க வேண்டும் எனக் கருதுகிறார். அவ்வாறு செல்ல முடியாமைக்குக் காரணம் இவ்வுடம்புடன் இவ்வுலகிடை இருப்பதே யாகும். கேவலம், தேவர் உலகம் செல்வதற்குக்கூட இவ் வுடம்பை இவ்வுலகிடை விட்டுச்செல்ல வேண்டுமென் றால், அதனைவிடப் பல்லாயிரம் மடங்கு மேம்பட்ட திரு வடிப் பேற்றைப் பெற்ற தாம் அத்திருவடியுடனேயே செல்ல முடியாமல் ப்ோனதற்குக் காரணம், இவ்வுடம்பே யாகும் என்ற முடிவிற்கு வந்தாராகலின் காய மாயத்தைக் கழித்து அருள் செய்யாய். தேவர் பிரானே' என்று வேண்டுகிறார். - 403. அறுக்கிலேன் உடல் துணிபடத் தீப் புக்கு - ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் பொறுக்கிலேன் உடல் போக்கு இடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடைப் பாகா இறக்கிலேன் உனைப் பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ் - திருப்பெருந்துறை மேவிய சிவனே 6 தி.சி.சி.IV 2