பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்த உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ள வில்லை; தீயில் விழுந்து உடலை வேகவைக்கவில்லை; இந்த உடலைப் போக்கிக் கொள்ளக்கூடிய இடமும் எதுவென்று முடிவாகத் தெரியவில்லை. இவை இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று பொறுமையோடு காத்திருக்கவும் முடியவில்லை (பொறுக்கிலேன்) என்று இவ்வளவு விரிவாகக் கூறுபவர் இவற்றுள் ஒன்றையும் தாம் செய்யாமல் இருப்பதற்குரிய காரணத்தையும் மிக அற்புதமாக முதலாம் அடியின் முடிவில் 'திருவருள் வகை அறியேன்” என்று பாடுகிறார். மேலே கூறிய இறப்பு முயற்சிக்கான மூன்று செயல்களையும் இவர் விரும்பியிருந்தால் எப்போதோ செய்திருக்கலாம். ஆனால், உடல் பொருள் ஆவி அனைத்தையும் அந்தத் திருவருளிடம் ஒப்படைத்து விட்டார் ஆதலின், அந்தத் திருவருள் வழிகாட்டினா லொழியத் தாமாக எந்த முடிவையும் எடுத்து, செயலாற்றும் உரிமை தம்பால் இல்லை என்பதையே 'திருவருள் வகை அறியேன்” என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். இவ்வளவும் கூறியபிறகு, தாம் சிக்கியிருக்கும் தர்மசங்கட நிலை அடிகளாருக்கு நன்கு புரிகின்றது. ஒரு விநாடிகூட இவ்வுலகிடை இருக்க அவர் விரும்பவில்லை. திருவடிகளில் அவரை இணைத்துக் கொள்ள வேண்டியவன் என்ன காரணத்தாலோ அதனைச் செய்யாமல் இருக்கின்றான். இந்த நிலையில்தான், உனைப் பிரிந்து இருக்கவேண்டி உள்ளது, இனிதாக வாழ்வை முடித்துக் கொள்ளவும் இல்லை, என் செய்கேன்' என்று வருந்துகிறார். 404. மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே